Tuesday, September 20, 2022

[பத்யம் #123] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #123] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 123]

ஜனன மரண ப்ரவஹ காரண

வெனிபனாதி3 ஸ்வாபி4மானவு

க்ஷண பி33தெ3 மனெமாடி3 மாடு3 மடி3 கெடி3ஸுதலி |

தெணிஸுதிரலதெ3 ஶாஶ்வதத3 3ஹு

4னதரத3 மெய்லிகெ3யு எனிபுது3

பி3னகு3 மானவனித3னு த்யஜிஸதெ3 மடி3 மாடே3னு ||123 

ஜனன மரண ப்ரவஹ - பிறப்பு இறப்பு சுழற்சிக்கான; காரணவெனிப - காரணம் எனப்படும்; அனாதிய - அனாதி அனந்தனான ஸ்ரீஹரியின்; ஸ்வாபிமானவு - பக்தியை; க்ஷண பிடதெ - ஒரு நொடியும் விடாமல்; மனெமாடி - செய்தவாறு; மாடுவ மடிய - அதன் மூலமாக செய்யப்படும் மடியை; கெடிஸுதலி - கெடுத்தவாறு; தெணிஸுதிரலு - அதனை நிறுத்தினால் (தடுத்தால்); அதே - அதுவே; ஷாஷ்வதத - நிரந்தரமான; பஹு கனதரத - மிகவும் கடுமையான; மெய்லிகெயு - விழுப்பு; எனிபுது - எனப்படுகிறது; பினகு மானவனிதனு - கீழான மனிதன் இதனை (மேற்கூறிய கெட்ட பழக்கத்தை) ; த்யஜிஸதெ - விடாமல்; மடிய மாடேனு - மடி செய்து என்ன பலன்? 

பக்தியின் முக்கியத்துவத்தை இங்கு விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர். 

பிறப்பு இறப்பு சுழற்சிக்கான காரணம் எனப்படும் அனாதி அனந்தனான ஸ்ரீஹரியின் மேலான பக்தியை ஒரு நொடியும் விடாமல் செய்தவாறு, அதற்காக செய்யப்படும் மடியை கெடுத்தால் / நிறுத்தினால், அதுவே நிரந்தரமான / மிகக் கடுமையான விழுப்பு எனப்படுகிறது. இத்தகைய கெட்ட பழக்கத்தை ஒரு மனிதன் விடாமல், தான் மடி செய்தால்தான் என்ன பலன்?. 

ஹரிஸ்மரணெ மாடோ நிரந்தர

பரகதிகெ இது நிர்தாரா - நோடோ

என்பது போன்றதான பற்பல கீர்த்தனைகளில், தொடர்ச்சியான பக்தியின் அவசியத்தை / முக்கியத்துவத்தை பல ஹரிதாஸர்கள் பாடியுள்ளனர். அதையே இங்கு சொல்லியிருக்கிறார் ஸ்ரீதாஸர்.


***


No comments:

Post a Comment