Wednesday, September 7, 2022

[பத்யம் #111] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #111] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 111]

போ4ஜனத3 ஸமயத3லி நெனெவுது3

மூஜக3த்பதி பஞ்சரூபவ

போ4ஜ்ய போ4ஜக போ4க்த்ரு போ4க்3யனு ஹரியெ எந்த3ரிது |

வாஜிவத3னகெ3 ஆத்மயக்ஞத3

பூஜெ எந்தி33னர்ப்பிஸலு தா

நைஜ ஸுக2பத3வித்து ஸலஹுவ 4க்தவத்ஸலனு ||111 

போஜனத ஸமயதலி - இவ்வாறு உணவு உண்ணும் சமயத்தில்; மூஜகத்பதி - மூவுலகின் தலைவனின்; பஞ்சரூபவ - அனிருத்தாதி ஐந்து ரூபங்களை; போஜ்ய - உணவு பதார்த்தங்கள்; போஜக - பரிமாறுபவர்; போக்த்ரு - உணவு உண்பவன்; போக்யனு - உணவின் ரஸத்தினை அனுபவிப்பவன்; ஹரியே - ஸ்ரீஹரியே; எந்தரிது - என்று தெரிந்து கொண்டு; வாஜிவதனகெ - குதிரை முகத்தினைக் கொண்டவனுக்கு; ஆத்மயக்ஞத - ஆத்ம யக்ஞத்தின்; பூஜெ - பூஜை; எந்து - என்று அனுசந்தானம் செய்து; இதனர்ப்பிஸலு - இதனை அர்ப்பணம் செய்தால்; பக்தவத்ஸலனு - பக்தவத்ஸலனான ஸ்ரீஹரி; தா - தான்; நைஜ ஸுகபதவித்து - நிரந்தர சுகமான முக்தி பதவியைக் கொடுத்து; ஸலஹுவ - காக்கிறான். 

உணவு உண்ணும் சமயத்தில் செய்ய வேண்டியதை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீதாஸர்.

உணவு உண்ணும் சமயத்தில், மூவுலகின் தலைவனை, அவனது அனிருத்தாதி ஐந்து ரூபங்களையும்; பரிமாறுபவர், உண்பவர், மற்றும் அந்த உணவின் ரஸத்தினை அனுபவிப்பவன், ஸ்ரீஹரியே என்பதை அறிந்து, அந்த குதிரை முகத்தினைக் கொண்டவனுக்கு, இது ஆத்ம யக்ஞத்தின் பூஜை என்று அனுசந்தானம் செய்தவாறு, இதனை அர்ப்பணம் செய்தால், பக்தவத்ஸலனான ஸ்ரீஹரி, தான் நிரந்தர சுகமான முக்தி பதவியைக் கொடுத்து காக்கிறான். 

ஐது3லக்ஷெம்ப3த்த1 ரொம்ப3

த்தாத3 ஸாவிரனேளுனூர்மே

லைது3 ரூப1 4ரிஸி போ3க்த்ருக3 போ4ஜ்ய னெந்தெ3னிஸி |

ஸ்ரீத4ரா து3ர்கா3ரமண பா

தா3தி3 ஷிரபரியந்த வியாபிஸி

காது3கொண்டி3 ஸந்தத ஜகன்னாத2விட்டலனு ||(4-30) 

ஸ்ரீ பூ துர்கா ரமணனான, நம் தாசராயரின் பிம்பரூபியான ஸ்ரீஜகன்னாதவிட்டலன், அன்னமயாதி கண்டரூபங்கள் 585400, அன்னாதி கண்ட ரூபங்கள் 4305 (ஆக மொத்தம் 589705) என உணவை உண்பவரில் அதாவது அவரின் பஞ்சபிராணர்களிலும், அந்த தத்வாபிமானி தேவதைகளிலும், ஜீவரிலும், அனைத்து இந்திரியங்களிலும், வியாப்தனாக இருக்கிறான். இது மட்டுமல்லாமல், போஜ்ய பதார்த்தங்களில் மொத்தம் 589705 ரூபங்களை தரித்து, பிராணிகளின் கால் முதல் தலை வரையிலும் நிலைத்திருந்து, எப்போதும் அவர்களை காத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக பரமாத்மனை தியானித்தால், நாம் நிர்லிப்தராக பரமாத்மனை அடையமுடியும் என்று பொருள்.

***

No comments:

Post a Comment