Sunday, September 18, 2022

[பத்யம் #121] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #121] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 121]

பு3த்3தி4பூர்வக ஞானப4க்திய

ஷுத்343னுப4வதி3ந்த3 காணதெ3

வித்3 பாண்டி3த்யக3 மெரெஸித3ரேனு அத்4வரதி3 |

மத்4 வல்லப4 தா3ஸரங்க்4ரிகெ3

பி3த்3து3 நமிஸதெ3 ஒத்3து3 மத3வனு

தித்3தி3 மனதொ3ளகா3த்மஶுத்3தி3 மார்க்க3 திளியத3லெ ||121 

புத்திபூர்வக - புத்தி பூர்வகமாக; ஞான பக்திய - ஞான பக்தியின்; ஷுத்ததனுபவதிந்த - யதார்த்த அனுபவத்தினால்; காணதெ - பார்க்காமல்; அத்வரதி - வைராக்கியத்துடன்; மத்வ வல்லப தாஸரங்க்ரிகெ - ஹரிதாஸரின் பாதங்களில்; பித்து நமிஸதெ - விழுந்து வணங்காமல்; மதவனு ஒத்து தித்தி - கர்வத்தினை அடக்கி, (மனதினை) திருத்தி; மனதொளகெ - மனதில்; ஆத்மஷுத்திய - ஆத்ம ஷுத்தியின்; மார்க்க திளியதலெ - வழியைக் காணாமல்; வித்ய பாண்டித்யகள மெரெஸிதரேனு - எவ்வளவு கல்விகளைக் கற்றால்தான் என்ன?. 

பிம்போபாஸனைக்கு தக்க வழிகளை கண்டுபிடிக்காமல், மக்கள் எதையெல்லாம் செய்கிறார்கள் என்று நாம் செய்யக்கூடாத விஷயங்களை இங்கு பட்டியலிடுகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

புத்தி பூர்வகமாக, ஞான பக்தியுடன், யதார்த்த அனுபவத்தினால் பார்க்காமல், வைராக்கியத்துடன் ஹரிதாஸர்களின் பாதங்களில் விழுந்து வணங்காமல், கர்வத்தினை அடக்கி மனதினை திருத்தி, மனதில் ஆத்ம ஷுத்தியின் வழியைக் காணாமல் - பண்டிதர்கள் எனப்படுபவர்கள் எவ்வளவு கல்விகளைக் கற்றால்தான் என்ன?. 

கரதலி ஜபமணி பாயலி மந்த்ரவு

அரிவெ முஸுகு மோரெகெ ஹாகி

பர ஸதியர குண மனதலி ஸ்மரிஸுத

பரம வைராக்யஷாலி எந்தெணிஸி.. (உதர வைராக்யவிது) 

என்று இந்த பாடலில் ஸ்ரீபுரந்தரதாசர் வைராக்யசாலி என்று வேடம் போடுபவர்கள் செய்யும் நாடகங்களை பட்டியல் இட்டிருப்பதையே இந்த பத்யத்திலும் ஸ்ரீதாஸர் கூறியிருக்கிறார். இவற்றை நாம் செய்யக்கூடாது என்பது கருத்து.


***


No comments:

Post a Comment