Thursday, September 29, 2022

[பத்யம் #131] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #131] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 131]

தா3ஸத3ர்பண நாமதி3ந்தி3து

ஸூஸுவந்த3தி3 முத3தி3 கருணிஸி

தா3 கு3ருகு1லதிலகரென்னனு தரலு பிரிதா3கி3 |

தே3தொ3ளகி3து3 பா4ஸவாயது

தோ3ஷலோபக3ளெணிஸத3லெ ஸம்

தோஷதி3ம் ஸ்வீகரிஸி ஹரிஸலி தா3 ப்ரேமிக3ளு ||131 

தாஸ குருகுலதிலகரு - தாஸரான முக்யபிராணர்; ஸூஸுவந்ததி - மிகவும் (மட்டற்ற); முததி - மகிழ்ச்சியுடன்; கருணிஸி - அருளி; என்னனு தரலு - என்னை ப்ரேரணை செய்ய; தாஸதர்பண - ஹரிதாஸ தர்பண; நாமதிந்திது - என்னும் பெயரில் இந்த கிருதி; தேஷதொளகிது - நாட்டில் இந்த கிருதி; பிரிதாகி - மிகவும் பெரியதாக; பாஸவாயது - பரவியது; தோஷலோபகளனு - இந்த கிருதியில் உள்ள குற்றம் குறைகளை; எணிஸதலெ - எண்ணாமல்; தாஸ ப்ரேமிகளு - ஹரிதாஸ ஸாகித்யத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்; ஸந்தோஷதிம் - மிகவும் மகிழ்ச்சியுடன்; ஸ்வீகரிஸி - இதனை ஏற்றுக் கொண்டு; ஹரிஸலி - பரவச் செய்யட்டும் (ஆதரவு அளிக்கட்டும்).

ஸ்ரீஹரிக்கு சமர்ப்பித்ததை அடுத்து, முக்யபிராணருக்கு இதனை சமர்ப்பித்து தனது தன்யதையை காட்டுகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

தாஸரான முக்யபிராணர், மிகவும் மகிழ்ச்சியுடன் அருளி என்னை ப்ரேரணை செய்ய, ஹரிதாஸ தர்பண என்னும் பெயரில் இந்த கிருதி, மிகவும் பெரியதாக இந்த நாட்டில் பரவியது. இந்த கிருதியில் உள்ள குற்றம் குறைகளை எண்ணாமல், ஹரிதாஸ ஸாகித்யத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், மிகவும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக் கொண்டு இதற்கு ஆதரவு அளிக்கட்டும்.

***


1 comment:

  1. மிக அருமையாக விளக்கியுள்ளார். . நன்றி மிக அருமையாக விளக்கியுள்ளார். . நன்றி

    ReplyDelete