Thursday, February 9, 2023

#100 - 285-286-287 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 285. ஸ்ரீ ஸ்பஷ்டக்ஷராய நம:

ஸ்தோத்ரக3ளிந்த3 திளிவ ஜராதி3 நா ஹீனனு

ஸ்ரீத3னு ஸ்பஷ்டாஜனரனுஸ்பஷ்டாக்ஷரநமோ எம்பெ3

வேதா3ர்த்த2 திளிஸி ஆரோக்3 ஆயுஷ்ய 3 ஞான

இத்தென்ன காயோ வேத3வ்யாஸ ஸ்ரீகிருஷ்ண ஹயக்3ரீவ 

ஸ்தோத்திரங்களால் நீ அறியப்படுகிறாய். பிறப்பு, இறப்பு முதலான எவ்வித அழிவும் இல்லாதவன் நீ. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவன். ‘ஸ்பஷ்டாக்‌ஷரனே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதார்த்தத்தினை தெரியவைத்து, ஆயுள், ஆரோக்ய, வலிமை, ஞானம் ஆகியவற்றைக் கொடுத்து என்னை காப்பாயாக. வேதவ்யாஸனே. ஸ்ரீகிருஷ்ணனே. ஹயக்ரீவனே. 

286. ஸ்ரீ மந்த்ராய நம:

உக்த மொத3லாத3 ஸ்தோத்ரக3ளன்ன நின்னய ஸந்தோ

ஷார்த்த2மாடி3ஸி ஸ்வீகரிஸுவிமந்த்ரநமோ பி3ரம்ம

ஸ்ரீத3 நின்ன ஸம்ஸ்மரிப 4க்தர ஸம்ரக்ஷிஸுவி

விபத்ஸர்வவ களெவி வேத3கா3யகர ப்ரிய 

பக்தர்கள் மூலமாக ஸ்தோத்திரங்களை சொல்லச் செய்து அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறாய். மந்த்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னை வணங்கும் பக்தர்களை நீ காக்கிறாய். அனைத்து துக்கங்களையும் நீ களைகிறாய். வேதங்களை சொல்பவர்களின் ப்ரியனே. 

287. ஸ்ரீ சந்த்ராம்ஷவே நம:

ஆஹ்லாத3கரத3 தே3 ஸேவிதசந்த்3ராம்ஶுநமோ

ஆஹ்லாத3கர சந்த்3ரகிரண நியாமக

ஆஹ்லாத3கனு ஸத்பாத்ரரிகெ3 சந்த்ராம்ஶு தெரதி3

ஆஹ்லாத3கர ஸக்ஞானவீவி ஸம்ஶய களெவி 

மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனே. தேவர்களால் வணங்குபவனே. சந்த்ராம்ஶுவே உனக்கு என் நமஸ்காரங்கள். குளிர்ச்சியைத் தரும் சந்திரனின் கிரணங்களில் இருந்து அதனை நியமனம் செய்பவனே. ஸத்பாத்ரர்களுக்கு சந்திரனின் கிரணங்களைப் போல குளிர்ச்சியைத் தருவதான, ஞானத்தை அளிக்கிறாய். அவர்களின் சந்தேகங்களை (அஞ்ஞானத்தினை) களைகிறாய்.

***


No comments:

Post a Comment