ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
279. ஸ்ரீ ஶிபிவிஷ்டா2ய நம:
ஶிபிவிஷ்ட2 நீ ஹவிஸ்ஸலி ப்ரவேஶ மாள்பி நமோ
ஶிபி எம்ப3 காஷ்ட2ஸ்த2 அக்3ன்யந்தர்யாமி ‘ஶிபிவிஷ்ட2’
ஶிபி எம்ப பஷு ஆவிஷ்ட2 அந்தராத்ம ஶிபிவிஷ்ட2
ஶிபிவிஷ்ட2 ஸர்வஸ்த2 பஶ்வாதி3 யக்ஞவஸ்த்வந்தஸ்த2
ஶிபிவிஷ்டனே நீ - யாகங்களிலும் போடும் ஹவிஸ்ஸில் பிரவேசம் செய்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். ஶிபி என்னும் காஷ்டத்தில் இருக்கும் அக்னியின் அந்தர்யாமியாக இருக்கிறாய். ஶிபி என்று பசுக்களில் இருக்கிறாய். அந்தராத்மத்திலும் இருக்கிறாய். பசுக்களில், யக்ஞங்களில் நீயே இருக்கிறாய்.
280. ஸ்ரீ ப்ரகாஶனாய நம:
யக்ஞகர்த்ரு கொடு3வ த3க்ஷிணெய ப்ரகாஶமாள்ப
‘ப்ரகாஶனே’ நமோ ஸூர்ய ஸோமாதி3க3ள பா4ஸகனே
ப்ரகர்ஷேண ஸுக2 அனுப4வ மாள்பானந்த3மய
ப4க்தர ஹ்ருத் பத்3மதி3ம் ஜ்வலிஸுவ ஆகாஶ நாம
யக்ஞங்களை செய்பவர் கொடுக்கும் தக்ஷிணையினை ஒளிர்விப்பவனே ‘ப்ரகாஶனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். சூர்ய சந்திரர்களை ஒளிர்விப்பவனே. உன்னை வணங்கும் பக்தர்களின் மனதில் இருந்துகொண்டு ஆனந்தத்தைக் கொடுத்து ஒளிர்விப்பவனே. ஆகாஶ நாமகனே.
281. ஸ்ரீ ஓஜஸ்தேஜோத்3யுதி1 த4ராய நம:
ஓஜஸ்தேஜஸ்ஸு ப்ரகாஶகத்வ த4ர்மவுள்ளவ
‘ஓஜஸ்தேஜோத்3யுதி த4ரனே’ நமோ எம்பெ3 நினகெ3
ஓஜஸ் ஸாமர்த்4யப3ல தேஜஸ்காந்தி யஶஸ்த்3ருதி
ஔஜ்வல்ய இவுக3ளு ஸதா3 த4ரிஸிருவி நீனு
No comments:
Post a Comment