Thursday, February 23, 2023

#102 - 291-292-293 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 291. ஸ்ரீ ஶஶிபி3ந்து3வே நம:

அதி ஶ்ரேஷ்ட ஸுக2ஸாத3 ஆஹ்லான ஞானவந்த

ஸ்ரீத3ஶஶிபி3ந்து3நமோ ஞானஞ்ஞான: ஸுக2ஸுக2:

அத்யந்த ஸுக2ஸ்வரூப ஞானாத்மா ஶஶிபி3ந்து3வே

இது3 திளிது3பாஸிப 4க்தர்கெ3 ஸுக2ஞானதா3 

மிகச் சிறந்ததான சுக சாதனமான ஞானத்தை கொடுப்பவனே. ஶஶிபிந்துவே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞான, அஞ்ஞான, சுக, துக்க, முக்தி, ஞான ஆகியவற்றை கொடுப்பவன் நீயே. இதனை அறிந்து உன்னை உபாஸனை செய்யும் பக்தர்களுக்கு சுக ஞானத்தை கொடுக்கிறாய். 

292. ஸ்ரீ ஸுரேஶ்வராய நம:

ஸுகா2னுப4வராத3 யோக்3யஜன ஸ்வாமியு நீனு

ஸுகா2த்மகஸுரேஶ்வரநமோ ஸதா3 நமோ எம்பெ3

முக்2 ஸ்வாமியே நீனு ஸுரரெல்லர ஶ்வரனு

ஏகாந்த 4க்தர ஹ்ருத்கமலதி3 ப்ரஜ்வலிபி 

சுகத்தை அனுபவிப்பரான முக்தி யோக்யர்களின் தலைவன் நீயே. ஸுகாத்மகனே. ஸுரேஶ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவருக்கும் ஸ்வாமியே. தேவர்கள் அனைவரின் ஈஸ்வரனே. உன்னுடைய ஏகாந்த பக்தர்களின் இதய கமலத்தில் நீ இருந்து ஒளிர்கிறாய். 

293. ஸ்ரீ ஔஷதா3 நம:

புரோட3 மொத3லாத3 ஹவிஸ்க்3ராஹகஔஷத3ம்

ஶிரபா3கி3 நமோ எம்பெ3 விபு4 ஸ்ரீஷ 4ன்வந்தரி

மூரு தாப பீடி3தர ஶ்ரயனு ஔஷத4னு

தீவ்ர 4வரோக3 பரிஹார து3க்க2 பே4ஷஜனு 

புரோடஶ முதலான ஹவிஸ்களை ஏற்றுக் கொள்பவனே. ஔஷதனே உன்னை தலைவணங்கி நமஸ்காரம் செய்கிறேன். தன்வந்த்ரி ரூபத்தினால், மூன்று விதமான தாபங்களையும் போக்குபவனே. அத்தகைய ஔஷதத்தினை தருபவனே. என்னுடைய சம்சார துக்கத்தினையும் பரிகாரம் செய்வாயாக.

***

No comments:

Post a Comment