ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
888. ஸ்ரீ ஸூர்யாய நம:
ஞானிக3ளிகெ3 ப்ராப்ய ‘ஸூர்யனே’ நமோ நமோ எம்பெ3
க்4ரணி நீனு அமித ஸ்வதேஜதி3 ஜ்வலிபி ஜக3ஜ்
ஜன்மாதி3கர்தா ஶேஷ்டக ஸ்பூர்த்திதா3தா அனக4 நீ
கு3ணக3ணார்ணவ ஸ்ரீமன் நாராயண த்4யேய நமோ
ஞானிகளுக்கு கிடைப்பவனே. ஸூர்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஒளிர்பவனே. நீ அபாரமான ஸ்வதேஜத்தினால் ஒளிர்கிறாய். ஜகஜ்ஜன்மாதி கர்தனே. தன் சொந்த இஷ்டத்தினால் அனைத்திற்கும் ஒளி அளிப்பவனே. அழிவில்லாதவன் நீ. நற்குணங்களை கொண்டவனே. ஸ்ரீமன் நாராயணனே. வணங்கத்தக்கவனே.
889. ஸ்ரீ ஸவித்ரே நம:
புத்ராதி3க3ளன்ன உத்பாத3ன மாடு3வ ‘ஸவிதா’
ஸதா3 நமோ ஸர்வஜக3த் ஸ்ருஷ்டா நீனே ஸர்வகர்தா
‘யதோ இமானி பூ4தானி ஜாயந்தே’ எந்து3 வேதோ3க்தி
பத்4மாஸனாதி3க3ள ஸ்ருஷ்டி மாடி3தி3 பத்4மனாப4
புத்ராதிகளை உற்பத்தி செய்து கொடுப்பவனே. ஸவித்ரே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து உலகங்களையும் உற்பத்தி செய்பவன் நீயே. அனைத்தையும் செய்விப்பவன் நீயே. ‘யதோ இமானி பூதானி’ என்று வேதங்கள் உன்னை புகழ்கின்றன. பிரம்மாதிகளை நீயே படைத்தாய். பத்மனாபனே.
890. ஸ்ரீ ரவிலோசனாய நம:
ஸ்தோத்ரவ அனுக்3ரஹ மாடி3 ஸ்வீகரிஸிஸுவி நீனு
ஸ்தோத்ரப்ரியனு ‘ரவிலோசன’ நமோ நமோ எம்பெ3
வேத3 ஹேளுதெ நின்னய ‘சக்ஷோ ஸூர்யோ ரஜாயத’
எந்து3 ‘த்4யாயே ந்ருஸிம்ஹ முருவ்ருத்த ரவி த்ரி நேத்ரம்’
உன்னைப் புகழும் ஸ்தோத்திரங்களை நீயே அருளி, அதனை நீயே ஏற்றுக் கொள்கிறாய். ஸ்தோத்ர ப்ரியனே. ரவிலோசனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சக்ஷோ ஸூர்யோ ரஜாயத என்று வேதங்கள் உன்னை புகழ்கின்றன. த்யாயே ந்ருஸிம்ஹ என்ற ஸ்தோத்திரமும் உன்னையே புகழ்கின்றன.
***
No comments:
Post a Comment