Tuesday, November 21, 2023

#310 - 916-917-918 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

916. ஸ்ரீ ஶஶிராய நம:

4க்தஶத்ருக3 நாஶமாடு3விஶஶிர நமோ

4க்தக3ஜேந்த்3ரன ஸ்தோத்ர மொரெய கேளி சக்ரி நீ

3ந்து3 நக்ரன்ன ஸீளி 4க்தன்ன காய்தி3 நீ ஸ்ரீஹரே

இந்து3மண்ட3 ஸ்தி2 வாஜிவத3 4ன்வந்தரி ஹம்ஸ 

பக்தர்களின் எதிரிகளை அழிப்பவனே. ஷஷிரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தனான கஜேந்த்ரனின் ஸ்தோத்ரங்களை கேட்டு, சக்ரத்தை ஏந்தியவனான நீ வந்து, முதலையை அழித்து, உன் பக்தனை காத்தாய். ஸ்ரீஹரியே. சந்த்ர மண்டலத்தில் இருப்பவனே. ஹயவதனனே. தன்வந்த்ரியே. ஹம்ஸனே. 

917. ஸ்ரீ ஶர்வரீகராய நம:

ஶத்ரு ஹிம்ஸாமாடு3வவஶர்வரீகரனே நமோ

ஶத்ரு விதா3ரணகெ3ய்வ சக்ராத்3யாயுத43ளன்னு

கரத3ல்லி ஹிடி3தி3ஹி மது4கைடப4 ஸம்ஹாரி

சந்த்3ரஸ்த2 ஹயஶீர்ஷ ஞானஸுக2பூர்ண மாம்பாஹி 

எதிரிகளை இம்சிப்பவனே. ஷர்வரீகரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளை அழிக்கும் சக்ராதி ஆயுதங்களை கைகளில் பிடித்திருக்கிறாய். மது, கைடபர்களை அழித்தவனே. சந்த்ரனில் இருப்பவனே. ஹயவதனனே. ஞான, சுக பூர்ணனே. என்னை அருள்வாயாக. 

918. ஸ்ரீ அக்ரூராய நம:

அக்ரூரனு நீனு அஹிம்ஸகனு நமோ நினகெ3

க்ரௌர்யவந்தெ3ந்தி3கு3 நினகெ3 இல்ல அக்4ருணியல்ல

ஸுக்ருபா நிதி4 4ர்மஸ்தா2பக ப்ரவர்த்தக நீனு

ஸுஹ்ருத3 பாலிஸுதி அச்யுதனே ராமப4த்ர 

அக்ரூரனே. நீ கருணை கொண்டவன். உனக்கு என் நமஸ்காரங்கள். உனக்கு என்றும் கடினமான இதயம் இல்லை. நீ கருணையற்றவன் அல்ல. கருணைக்கடலே. தர்மத்தை நிலை நாட்டுபவனே. தர்மத்தை ப்ரவர்த்தகம் செய்பவனே. நல் இதயம் கொண்டவர்கலை காப்பவனே. அச்யுதனே. ராமபத்ரனே. 

***


No comments:

Post a Comment