Thursday, November 30, 2023

#319 - 943-944-945 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

943. ஸ்ரீ தி3ஶாய நம:

4க்தரிந்த3 ப்ரஶ்னெ மாடி3ஸி கொம்பி3 நீதி3 நமோ

பத்மஸம்ப4 தே3வஹூதி அர்ஜுனாதி33ளிந்த3

மது4ஸூத3 ஹம்ஸ கபில யாத3வகிருஷ்ண நீ

ஸாத3ரதி3 ப்ரஶ்னெ மாடி3ஸிகொண்டு3 வரக3ளித்தி 

திஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்ம, தேவஹூதி, அர்ஜுனன் முதலான பக்தர்களிடமிருந்து கேள்விகளை கேட்டுக் கொள்பவனே. மதுஸூதனனே. ஹம்ஸனே. கபில. யாதவக்ருஷ்ணனே. நீ அவர்களிடமிருந்து கேள்விகளை கேட்டுக் கொண்டு அவர்களுக்கு வரங்களை அளித்தாய். 

944. ஸ்ரீ அனாத3யே நம:

ஆதி3 இல்ல மத்4 இல்ல அந்த்யவில்லவு நினகெ3

அனாதி4நமோ நமோ எம்பெ3 த்ரைகாலிக ஏகாத்மா

மாத4வனே நினகெ3 ஸர்வரு அதீ4னராகி3ஹரு

ஸ்வதந்த்ர ஏகாத்மா எந்த3ரெ முக்2யஸ்வாமி ஸ்வராட் நீ 

உனக்கு ஆதி, அந்தம், மத்யம் என எதுவுமே இல்லை. அனாதியே உனக்கு என் நமஸ்காரங்கள். மூன்று காலங்களிலும் இருப்பவனே. ஏகாத்மனே. மாதவனே. உனக்கு அனைவருமே அதீனராக இருக்கிறார்கள். ஸ்வதந்த்ரனே. ஏகாத்மா என்றால் முக்யஸ்வாமி என்று அர்த்தம். ஸர்வோத்தமனே. 

945. ஸ்ரீ பூ4ர்பு4வர் லக்ஷ்ம்யை நம:

யக்3ஞத3ல்லிருவி ஶ்வர்யவர ப்ரகாஶகனு

ஸர்வக்ஞபூ4ர்பு4வோர்லக்ஷ்மீ நமோ நமோ எம்பெ3

தோயஜாஸனாண்டா3தி3 ஸமஸ்த ஜக3த் ஸ்ருஷ்டா நீனு

விக்3ஞான ஸுக23லாதி3 உத்க்ருஷ்ட கு3ணபூர்ணனு 

யக்ஞத்தில் இருப்பவனே. ஐஸ்வர்யவந்தனே. ஒளி பொருந்தியவனே. ஸர்வக்ஞனே. பூர்புவர் லக்‌ஷ்ம்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மாண்டம் முதலான அனைத்து ஜகத் ஸ்ருஷ்டனே. விக்ஞான, சுக, பலம் முதலான மிகச்சிறந்த குணங்களை கொண்டவனே. 

***


No comments:

Post a Comment