Thursday, November 2, 2023

#302 - 891-892-893 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

891. ஸ்ரீ அனந்தாய நம:

ஞான விஸ்தாரகனுஅனந்த நமோ நமோ எம்பெ3

நின்ன ஸ்துதிஸுவ 4க்தரிகெ3 ஞானாதி33

உன்னாஹிஸி ஸாத4னகெ ப்ரதிப3ந்த4 பா3ரதெ3

4னத3யதி3 ஒத3கு3வி அக3ணித ஸுகு3ணார்ணவ 

ஞானத்தை வளர்ப்பவனே. அனந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னை வணங்கும் பக்தர்களுக்கு, ஞானாதிகளை கொடுத்து, ஸாதனைகளுக்கு எவ்வித தடைகளும் வராதவாறு, கருணையுடன் அவர்களுக்கு அருள்கிறாய். எல்லையற்றதான நற்குணங்களைக் கொண்டவனே. 

892. ஸ்ரீ ஹுதபு4க்போ4க்த்ரே நம:

ஞானாயுக் ப்ரேம ப்ரவாஹதி3ம் ஸ்துதிஸுவ 4க்தர

நீனு பாலிஸுவிஹுதபு4க் போ4க்தா நமோ நினகெ3

4 உபாஸனாதி3 ஸாத4னதி3 4ஜனஸ்தோத்ர

பூஜன நைவேத்3 ஸ்வீகரிஸி 4க்தர பாலிபி 

ஞானத்துடன், பக்தி ப்ரவாகத்துடன் உன்னை வணங்கும் பக்தர்களை நீ காக்கிறாய். ஹுதபுக்போக்த்ரே உனக்கு என் நமஸ்காரங்கள். உபாஸனையுடன், பஜனை, ஸ்தோத்திர, பூஜை, நைவேத்ய ஆகிய ஸாதனைகளை செய்வதை, நீ ஏற்றுக் கொண்டு பக்தர்களை காக்கிறாய். 

893. ஸ்ரீ ஸுக2தா3 நம:

சென்னாகி3 ஶுப4னா மாடு3விஸுக2தா3நமோ

அனுதி3 ஸம்ஸாரவஸ்தா2 கஷ்ட பரிஹரிஸி

ஜனன ஜராமரணாக்2 ஸம்ஸார உபத்3ரவ

நீனு தூ3 மாடி3 நிரந்தர ஸுக2வன்னு ஈவி 

அஷுபங்களை நீ நன்றாக அழிக்கிறாய். ஸுகதாயனே உனக்கு என் நமஸ்காரங்கள். தினமும் வரக்கூடியதான சம்சார நிலையின் கஷ்டங்களை பரிகரித்து, பிறப்பு, மரண ஆகியவற்றை கொண்ட சம்சார உபத்ரவங்களை நீ விலக்கி, நிரந்தர சுகங்களை அருள்கிறாய். 

***


No comments:

Post a Comment