Sunday, November 19, 2023

#308 - 910-911-912 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

910. ஸ்ரீ குண்ட3லினே நம:

ஶத்ருக3 3ண்டி3ஸுவிகுண்ட3லி நமோ நினகெ3

ஸுப்ரோஜ்வல மகர குண்ட3லக3ளு தடன்னிபா4

உரு த்ரிநேத்ர நரஸிம்ஹ நீ 4க்தர ஶத்ருக3ள்

க்ரூர ஹிம்ஸகர 4ஸ்மமாள்பி அஸஹ்ய வீர்ய 

எதிரிகளை தண்டிப்பவனே. குண்டலினே உனக்கு என் நமஸ்காரங்கள். ஒளிர்வதான மகர குண்டலங்கள், ஒளிரும் மூன்று கண்கள் கொண்ட நரசிம்ஹனே. நீ பக்தர்களின் எதிரிகளுக்கு துன்பத்தை தருகிறாய். அவர்களை பஸ்மம் ஆக்குகிறாய். வெல்லமுடியாத வீரத்தை கொண்டவனே. 

911. ஸ்ரீ சக்ரிணே நம:

யந்த்ரீ நமோசக்ரீ ஸுத4ர்ஶனாஹ்வய 4க்ததா4ரீ

கோ4 4 தமஸ்ஸன்ன கத்தரிஸி மார்க்க3வன்னு

தோரிஸி அர்ஜுன ஸஹன அனந்தாஸன போகி3 நீ

விப்ரன மக்களன்னு தந்தி3த்தி மஹாவீர கிருஷ்ண 

யந்த்ரங்களால் பூஜிக்கப்படுபவனே. சக்ரிணே. உனக்கு என் நமஸ்காரங்கள். சுதர்ஷன சக்ரத்தை ஏந்தியவனே. பக்தர்களின் கோரமான அபாரமான தமஸ்ஸினை கத்தரித்து, அவர்களுக்கு நல்வழியைக் காட்டி அருள்கிறாய். அர்ஜுனனின் நண்பனே. அனந்தாஸனனே. பிராமணனின் இறந்திருந்த குழந்தைகளை நீ மறுபடி கொண்டு வந்து கொடுத்தாய். மஹாவீரனே. கிருஷ்ணனே. 

912. ஸ்ரீ விக்ரமிணே நம:

ஶக்திமந்த வாயுதே3வனுள்ளவவிக்ரமி நமோ

ரத2னாபௌ4 அரஇவ யாவ வாய்வல்லி ஸர்வவு

ப்ரதிஷ்டி2தவோ வாயு ஶக்தியுக்3 பா4ரதீஶனு

ப்ரதிஷ்டி2தனு நின்னல்லி த்வத்க்ரியாப3 ப்ரதிமா 

சக்திவந்தனே. வாயுதேவனின் அந்தர்யாமியான விக்ரமிணே உனக்கு என் நமஸ்காரங்கள். எந்த வாயுதேவரின் அனைத்தும் ப்ரதிஷ்டிதமாக இருக்கிறதோ, அந்த வாயு, பாரதீஷன், உன்னில் ப்ரதிஷ்டிதனாக இருக்கிறான். இவை அனைத்தும் உன்னுடைய கருணையின் பலத்தினாலேயே ஆகிறது. 

***


No comments:

Post a Comment