Saturday, March 5, 2022

ஸ்லோகம் #11: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #11: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

****

[ஸ்லோகம் 11]

ஸரிது33ருதிரெ கொ1ல்லலோஸுக3 உரக3ரூபிய தை3த்யனனு வர

சரணகமலத3 லீலெயலி ஸம்ஹரிஸித3னு க்‌ஷணதி3 |

ஸுரவரார்ச்சித சரணநாத3ரு த4ரணிஸுரனனு நமிஸி வேத3

நரியுவந்த3தி3 நட1னெ மாடி33 லோகஷிக்‌ஷகனு ||11 

கொல்லலோஸுக - தன்னை கொல்வதற்காக; ஸரிது பருதிரெ - பாய்ந்து வந்த; உரகரூபிய - பாம்பு வடிவிலான; தைத்யனனு - அசுரனை; வர சரணகமலத - தன் அழகான கால்களால்; லீலெயலி - விளையாட்டாக; க்‌ஷணதி - நொடிப்பொழுதில்; ஸம்ஹரிஸிதனு - வாசுதேவன் கொன்றான்; ஸுரவரார்ச்சித சரணநாதரு - தேவதைகளின் கூட்டத்தினால் வணங்கப்படும் சரணங்களைக் கொண்டவன் என்றாலும்; தரணிஸுரனனு நமிஸி - பூமியில் கற்றறிந்தவரான குருகளின் பாதங்களில் வணங்கி; வேதவ நரியுவந்ததி - வேதங்களை கற்க வந்திருப்பதாக; லோகஷிக்‌ஷகனு - உலகத்தையே திருத்துபவன்; நடனெ மாடித - நாடகம் ஆடினான். 

வாசுதேவனின் பாலலீலைகளை மேலும் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

தன்னை கொல்வதற்கு பாய்ந்து வந்த பாம்பு வடிவிலான அசுரனை, வாசுதேவன் தன் அழகான கால்களால் விளையாட்டாக நொடிப்பொழுதில் கொன்றான். தேவதைகளின் கூட்டத்தினால் வணங்கப்படும் சரணங்களைக் கொண்டவன் என்றாலும், பூமியில் கற்றறிந்தவரான குருகளின் பாதங்களில் வணங்கி, வேதங்களை கற்க வந்திருப்பதாக, உலகத்தையே திருத்துபவன், நாடகம் ஆடினான். 

வாசுதேவன், பாம்பினைக் கொன்ற மகிமை, மத்வ விஜயத்தில் 3-38, 39, 40 ஆகிய ஸ்லோகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

அவிரளைர்கரளோஷ்மபிராகுலீ

க்ருத ஸமஸ்த ஜனோ விசசார ய: |

க்வசிதமும் நிஜிகாம்ஸூரஷாந்தி மான்

உப ஸஸர்ப ஸ ஸர்ப மயோsஸுர: ||3-38

...

 கருட துண்டமிவ ப்ரதி பன்னவான்

த்விஜ குமார பதம் ச மமார ச ||3-40 

மணிமந்தன் என்னும் அசுரன் பாம்பின் வடிவில் வந்து சர்வமயோSசுர:’, தன் விஷ ஜுவாலையினால் மக்களை அச்சுறுத்தி பயங்கரமாக உலவி வந்தான். ஒரு நாள் இந்த அசுரன், ஆகணாஷ்மசமரான (யாராலும் வெல்லப்பட முடியாதவர்) வாசுதேவனைக் கொல்லவேண்டி அவனின் காலைக் கடித்தான். அப்போது வாசுதேவன் தன் அழகான கால் கட்டைவிரல்களினால் அவனை மிதித்தான். அசுரன் மடிந்தான். இந்தச் செயல் வாயுதேவரால் சாத்தியமாகி, சஜ்ஜனர்களுக்கு பிரியமானதாக இருந்தது. தேவதைகள் மகிழ்ச்சியடைந்தனர். 

கர தளே கலு கந்துக வத் ஸதா

ஸகலயா கலயா ஸஹ வித்யயா |

அரி தரேண ஸமம் ஸ்புரிதம் குரோ:

மனஸி தஸ்ய விடம்பயதோ ஜனான் ||3-42 

வேதங்களால் புகழப்படும் இந்த எதிர்கால-பிரம்மன், உபநயன காரியத்தால் வேதங்களைப் படிக்கும் அதிகாரத்தைப் பெற்றார். ருத்ர, ப்ருஹஸ்பதி, இந்திர ஆகிய தேவதைகளால் எந்நேரமும் பூஜிக்கப்படலானார். ஆனால், மனித வடிவில் இருந்ததால் குருகளில் பாதங்களில் விழுந்து, பாடத்தைத் துவங்கினார். சாதாரணரைப் போல பாடத்தைப் படித்த வாசுதேவனின் மனதில் அனைத்து வித்யைகளும், அனைத்து பாடங்களும் கையிலிருக்கும் பந்து போல தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. ஞானஸ்வரூபரான வாயு அவதாரத்திற்கு, குருகுலவாசம் என்பது முரணாகத் தெரிந்தது. 

சிறுவன் வாசுதேவனின் மகிமைகளை ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் மேலும் அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறார்.

 ***


Friday, March 4, 2022

ஸ்லோகம் #10: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #10: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 10]

யாரு நினகெ3 ஸஹாயகரு ஈ கோ4ரவனத3லி பேளெனலு தா

தோரித3னு வனஸத3னவல்லப4 மாரஜனகனனு |

ஸூரி ஷிவனனு கெ3லிது3 ஸபெ4யலி சாருவடுவெனிஸித3 ஸகாலதி3

மாருதன மூரனெய ரூபவு ஸ்ரேயவனு கொட3லி ||10 

கோரவனதலி - இந்த அடர்ந்த காட்டினில்; யாரு நினகெ - உனக்கு யார்; ஸஹாயகரு - உதவினார்கள்?; பேளெனலு - சொல் என்று கேட்க; வனஸதனவல்லப - காட்டில் இருந்த தலைவனான; மாரஜனகனனு - மாரஜனகனான ஸ்ரீஹரியை; தோரிதனு - காட்டினான்; ஸூரி ஷிவனனு - கற்றறிந்த சிவ பிராமணர் ஒருவரை; கெலிது - வென்று; ஸபெயலி - மக்கள் நிறைந்த சபையில்; சாருவடுவெனிஸித - திறமையான சிறுவன் எனப்பட்ட; மாருதன மூரனெய ரூபவு - வாயுதேவரின் மூன்றாம் ரூபமான இவர்; ஸகாலதி - தக்க சமயத்தில்; ஸ்ரேயவனு - வளமையை (வளர்ச்சியை); கொடலி - கொடுக்கட்டும். 

சிறுவன் வாசுதேவன் தொலைந்து போய், மறுபடி கிடைத்த சம்பவத்தை தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

இந்த அடர்ந்த காட்டினில் உனக்கு யார் உதவினார்கள் என்று தந்தை கேட்க, காட்டில் இருந்த தலைவனான, மாரஜனகனான ஸ்ரீஹரியை காட்டினான் வாசுதேவன். கற்றறிந்த சிவ பிராமணர் ஒருவரை வென்று, மக்கள் நிறைந்த சபையில் திறமையான சிறுவன் எனப்பட்டார். வாயுதேவரின் மூன்றாம் அவதாரமான இவர், தக்க காலத்தில் நமக்கு வளமையைக் கொடுக்கட்டும். 

அயி ஸுதேதமுதா ஹர தத்வதோ

நனு ஸமா கதவானஸி ஸாம்ப்ரதம் | 3-11 

வருத்தத்தில் வந்த கண்ணீரை அடக்கிய தந்தை, மகனைக் கண்டதும் வந்த ஆனந்தக்கண்ணீரை மறுபடி அடக்கினார். எப்படி யாருடன் வந்தாய்?’ என்று கேட்டார். அப்பா, தாளெகுடத்து நாராயணனே என்னுடன் வந்தான்என்ற சிறுவன் கூறினான். 

சிறுவன் வாசுதேவன், சிவ பிராமணருடன் வாதம் செய்து வென்ற மகிமை, மத்வ விஜயத்தில் 3-22 முதல் 3-27 வரை ஆறு ஸ்லோகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

பரிஷதா நிதராம் பரிவாரித:

ஷிவபத: கில தௌத படோத்பவ: |

இஹ கதாம் கதயன் தத்ருஷே

தத: ப்ருது தியா ப்ருதுகாக்ருதினாsமுனா ||3-22 

அத கதம் கதயேதி ததா ஜனே கதிதவத்யுசிதார்த்தமுதாஹரன் |

ஸ ஸமலாஹ்யத விஸ்மயிபினரை: அபி ஸுரைர்விஜயாங்குர பூஜகை: ||3-25 

ஒரு முறை வாசுதேவன், தன் தாயுடன் ஒரு உற்சவத்திற்குச் சென்றான். அங்கு ஒரு நிகழ்ச்சி. த்யௌதபட வம்சத்தின் சிவபிராமணர் ஒருவரால் புராண சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது. வாசுதேவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். ஹே பிராமணரே! நீங்கள் சொல்வது வியாச ஸுகர்களுக்கு ஒப்புவதில்லைஎன்றான். மக்கள் அந்த சொற்பொழிவை புறக்கணித்து, சிறுவனின் திறமையை புகழ்ந்தனர். புலிக்குட்டி கர்ஜிக்கும்போது, நரியின் கூக்குரலை யார் கேட்பார்கள்? மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, சரியான பதிலையும் கொடுத்தான். அங்கிருந்த மக்களின் மகிழ்ச்சியும், வாயுதேவரின் வெற்றியைக் கொண்டாடிய தேவர்களின் மகிழ்ச்சியும் ஒன்றானது. வாசுதேவனை அனைவரும் பாராட்டினர். பிறகு வீட்டிற்குத் திரும்பிய வாசுதேவன், அனைத்தையும் தந்தைக்கு தெரிவித்தான். யார் சொன்னது சரி என்று கேட்டான். சரியான விளக்கத்தைக் கொடுத்த மகனின் பதிலே சரி என்றதோடல்லாமல், இது தனது தலைவனான அனந்தேஸ்வரனின் மகிமையாலேயே ஆனது என்று நினைத்தார். 

இத்தகைய மகிமைகளைக் கொண்ட ஸ்ரீவாயுதேவரின் மூன்றாம் அவதாரம், நமக்கு நன்மைகளைக் கொடுக்கட்டும் என்று வாசுதேவனின் பாலலீலைகளை மேலும் அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


Thursday, March 3, 2022

ஸ்லோகம் #9: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #9: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 9]

ஜனனிஜனகர ஸஹித பா3ந்த4வ ஜனர க்3ருஹகொ3ந்து3 தி3ன தெரளித3

ஜனதெ1யதி1 ஸம்ப்4ரமத3லிருதிரெ தரள ஹொரஹொரட |

வனவனவ ஸஞ்சரிஸியல்லிஹ வனஜனாப4ன மந்தி3ரக3ளலி

3ணிவு காணதெ3 ஹரிய நமிஸுத ஸிக்கித3னு பி1தகெ3 ||9 

ஜனனி - தாய்; ஜனகர ஸஹித - தன் குடும்பத்தினருடன்; பாந்தவ ஜனர - தன் உறவினர்களின்; க்ருஹகெ - வீட்டிற்கு; ஒந்து தின - ஒரு நாள்; தெரளித - சென்றான்; ஜனதெ - அனைவரும்; அதி ஸம்ப்ரமதலிருதிரெ - ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு மகிழ்ந்திருக்க; வனஜனாபன - பத்மனாபனின்; மந்திரகளலி - கோயில்களில்; தணிவு காணதெ - சோர்வு இல்லாமல்; ஹரிய நமிஸுத - ஹரியை வணங்கிக் கொண்டிருந்த வாசுதேவன்; பிதகெ - தந்தைக்கு; ஸிக்கிதனு - கிடைத்தான். 

சிறுவன் வாசுதேவனின் பாலலீலைகளை ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் தொடர்ந்து விளக்குகிறார். 

வாசுதேவன், தன் தாய், மற்றும் குடும்பத்தினருடன், தன் உறவினர்களின் வீட்டிற்கு ஒரு நாள் சென்றான். அங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு மகிழ்ந்திருக்க, வாசுதேவன் வெளியேறினான். பிறகு, பத்மனாபனின் கோயிலில் வணங்கிக் கொண்டிருந்தபோது, தந்தைக்கு கிடைத்தான். 

மத்வ விஜயத்தில் இந்த சம்பவம் மூன்றாம் சர்க்கத்தில் 1ம் ஸ்லோகங்கத்திலிருந்து 15ம் ஸ்லோகம் வரை வர்ணிக்கப்பட்டுள்ளது. 

அத கதாசன ஸுந்தர நந்தனஸ்மித

முகேந்து த்ருஷாம் தயிதௌ ந்ருணாம் || 3-1 

நளினனாப நிபாலன ஸம்மதாகம

விகஸ்வர பாஸ்வர லோசன: ||3-5 

அயி ஸுதேதமுதா ஹர தத்வதோ

நனு ஸமா கதவானஸி ஸாம்ப்ரதம் || 3-11 

ஒருமுறை ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நடுவைரி என்னும் கிராமத்திற்கு அனைவரும் புறப்பட்டனர். அங்கு உற்சவத்தின் கொண்டாட்டம், குதூகலத்தில் தாய் மூழ்கினாள். வாசுதேவனுக்கு நேரம் போகவில்லை. த்ருவனைப் போல் வெளியே புறப்பட்டான். மூன்று வயதுக் குழந்தை தனியாகப் போவதைக் கண்டவர்களின் கேள்விக்கு ஸ்மிதமனாகுலம் உத்தரமாதனோத்’ (3-3), கம்பீரமான சிரிப்பே பதிலாயிற்று. குடுமூரு என்னும் ஹரனின் கோயிலுக்குப் போய் வணங்கி, அங்கிருந்து தாளெகுட என்னும் கோயிலுக்கு வந்து நாராயணனை வணங்கினான். 

பிறகு ரஜதபீடபுரம் பிரயயாவஸௌ’ (3-5) ரஜதபீடபுரம் (உடுப்பி) போய்ச் சேர்ந்தான். அங்கு அனந்தேஸ்வரனை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். இது 10 அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன்களை விட அதிக பலன்களைக் கொடுப்பதாக இருந்தது என்று தேவர்களும் பிராமணர்களும் கருதினர். 

தன் மகனே தன்னுடைய உலகம் என்றிருந்த மத்யகேஹர், அவனைக் காணாமல் வருந்தி தேடத் துவங்கினர். வழியில் கண்டவர்களிடம் கேட்டவாறு நடந்தார். நறுமணத்தைக் கண்ட தும்பி எவ்வளவு ஆனந்தப்படுமோ அப்படி தன் மகனின் சிரித்த முகத்தைக் கண்டதும் மத்யகேஹர் மகிழ்ச்சியடைந்தார். இதே சம்பவத்தை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

மத்வ விஜய மூன்றாம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார். 

உபனீத: ஸுவிதி4னா ஸ்வபித்ராsதீ4தவான் த்3விஜாத் |

3ஹூன் வேதா3ன் க்‌ஷணேனைவ த்ருதீயே கதி2தம் த்வித3ம் ||4|| 

மூன்றாம் சர்க்கத்தில், சிறந்த பிராமணரான, தந்தையான, மத்யகேஹ பட்டர் மூலமாக, விதிப்படி, சிறப்பாக, உபநயன சம்ஸ்காரத்தைப் பெற்று, குருகுலவாசம் செய்து, மிகக் குறைந்த காலத்திலேயே அனேக வித வேதங்களின் அத்யயனத்தை செய்து, குருகளுக்கு ஐதரேய உபநிஷத்தின் அனேக ரகசிய ப்ரமேயங்களைக் கூறி, குருதட்சிணையாகக் கொடுத்தார். 

மூன்றாம் சர்க்கம் படிப்பதன் பலன் : ஸ்வரூப ஞானம் அடைதல்.

 ***

Wednesday, March 2, 2022

ஸ்லோகம் #8: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #8: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 8]

ம்ருது3ள கலபா4ஷணதி3 ஸ்வஜனகெ முத3வனீயுதலொந்து3 தி3

வைதி33னு வனவனு வ்ருஷப4 பா3லவ பிடி3து3 ஸந்தஸதி3 |

பெத3ரிஸித3 ருணகொட்ட த4னிகன ஹ்ருத3ய கரகு3வ தெரதி3 ஸுந்த3

வத3ன த3ர்ஷனவித்த வாயுகுமார ரக்‌ஷிஸலி ||8 

ம்ருதுள - அழகான / கொஞ்சும்; கலபாஷணதி - மழலை மொழியில்; ஸ்வஜனகெ - தன் குடும்பத்தவர்க்கு; முதவனீயுத - மகிழ்ச்சியைக் கொடுத்தான்; ஒந்து தின - ஒரு நாள்; வ்ருஷப பாலவ பிடிது - எருதின் வாலினைப் பிடித்துக் கொண்டு; ஸந்தஸதி - மகிழ்ச்சியுடன்; வனவனு - காட்டினை நோக்கி; ஐதிதனு - சென்றான்; பெதரிஸித - கோபத்துடன் மிரட்டிய; ருணகொட்ட - கடன் கொடுத்த; தனிகன - செல்வந்தனின்; ஹ்ருதய கரகுவ - இதயம் உருகுமாறு; ஸுந்தர வதன - தன் இன்முகத்தினை; தர்ஷனவித்த - தரிசனம் கொடுத்த; வாயுகுமார - வாயுகுமாரர்; ரக்‌ஷிஸலி - நம்மை காக்கட்டும். 

குழந்தை வாசுதேவனின் பால லீலைகளை ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார். 

அழகான கொஞ்சும் மழலை மொழியில், வாசுதேவன் தன் குடும்பத்தவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தான். ஒரு நாள், எருதின் வாலைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் காட்டிற்குச் சென்றான். கோபத்துடன் மிரட்டிய கடன் கொடுத்த செல்வந்தனின் இதயம் உருகுமாறு, தன் இன்முகத்தினை தரிசனம் அளித்த வாயுகுமாரர், நம்மை காக்கட்டும். 

தேவாதி ஸத்பிரனு பாலிதயாssதரேண

தேவ்யாssத்மனேவ விலஸத் பதயா நிதாந்தம் |

அவ்யக்தயா ப்ரதமதோ வதனேsஸ்ய வாண்யா

ஷாலீனயேவ புவனார்ச்சிதயா விஜஹ்ரே || 2-43 

உலகத்தின் செயல்கள் யாரினால் நடைபெறுகிறதோ அத்தகைய வாயுதேவர், வாசுதேவனாக ஒரு சாதாரண குழந்தையைப் போல தன் மழலைப் பேச்சினைத் துவக்கினார். பிஞ்சுக் கால்களால் நடந்தார். மெதுவாக எழுந்து நின்றார். நடக்கத் துவங்கினார். 

புச்சாந்தமச்சமவ லம்ப்ய கதா சிதேஷ:

ப்ராதர்வ்ரஜாத்வ வ்ரஜத ஏவ நிஜர்ஷபஸ்ய |

ப்ராயாத் ப்ரியஸ்ய ஸஹஸா ஸ்வ ஜனைரத்ருஷ்டோ

நானா வனேஷு சரதஷ்சரதஸ்த்ருணானி ||2-45 

ஒரு நாள் காலை வேளை. மத்யகேஹ பட்டரின் எருது, மேய்வதற்குக் கிளம்பியது. இந்தச் சிறுவன் அதன் வாலினைப் பிடித்து, யாரும் பார்க்காதபோது அதனுடனே புறப்பட்டான். இதை அறியாத பெற்றோர், உறவினர் நண்பர்கள் அனைவரும், பட்டரின் ஒரு வயதுக் குழந்தையை காணவில்லை என்று வருத்தத்துடன் தேடத் துவங்கினர். குழந்தையை எருதுடன் காட்டில் பார்த்தேன் என்று ஒருவர் சொன்னதை, மாலையில் திரும்பி வந்த குழந்தையைக் கண்டதும் நம்பினர். 

லீலா கரேண ஸ கரேண ஸு கோமலேன பீஜாந்தராணி கில கானி சிதாஷு தஸ்மை |

ஸ்மித்வாsர்பகோsபிமத நிஷ்கபதே யதாsதாத் ஆதத்த தானி தனிகோ பஹுமான பூர்வம் ||2-51 

ஒரு நாள், மத்யகேஹ பட்டருக்கு எருதினை விற்ற வியாபாரி, அதற்கான பணத்தைப் பெறவேண்டி அவர் வீட்டிற்கு வந்தான். அப்போது விளையாடிவிட்டு திரும்பிய வாசுதேவன், தந்தையை உணவு உண்பதற்கு அழைத்தான். வியாபாரிக்கு பணம் கொடுக்கும்வரை தான் உண்பதில்லை என்று கூறி, வாசுதேவனை உணவுண்ணச் சொன்னார் பட்டர். அந்த வியாபாரிக்குக் கொடுக்கவேண்டிய பணத்திற்கு பதிலாக, தன் கை நிறைய புளியங்கொட்டைகளை எடுத்துக் கொடுத்தான் வாசுதேவன். அந்த வியாபாரியும் மிகவும் மகிழ்ச்சியுடன் அதையே பெற்றுச் சென்றான். 

இத்தகைய வாயுகுமாரர், நம்மை காக்கட்டும் என்று சொல்லி, சிறுவன் வாசுதேவனின் பாலலீலைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

இத்துடன் மத்வவிஜயத்தின் இரண்டாம் சர்க்க விஷயங்கள் முடிந்தன. 

***

Tuesday, March 1, 2022

ஸ்லோகம் #7: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #7: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 7]

கோ3ப்ரதா3யக விப்ரவர்யகெ3 க்‌ஷிப்ரத3லி ஸுப்ரக்3ஞெயித்தனு

ஸ்வப்ரபா4வதி3 நிஜஜனர க்3ரஹப4யவ நீகி3ஸுத |

விப்ரஸதி ஹொரகி3ரலு ரோத3ன தப்பிஸலு நிஜ ஸஹஜெயுணிஸித3

ப்ரப்ரபக்வ குலித்த2 பு4ஜிஸி ஜீர்ணிஸித3 க்‌ஷணதி3 ||7 

கோப்ரதாயக - (குழந்தைக்கு பால் குடிப்பதற்காக) பசு கொடுத்த; விப்ரவர்யகெ - பிராமணருக்கு; க்‌ஷிப்ரதலி - விரைவில் (அடுத்த பிறவியில்); ஸுப்ரக்ஞெயித்தனு - ஆசார்யரின் சாஸ்திர ஞானத்தை அளித்தான்; ஸ்வப்ரவாவதி - தன்னுடைய சக்தியால்; நிஜஜனர - தன் குடும்பத்தினரை; க்ரஹபயவ - பூதத்தின் பயத்தினை; நீகிஸுத - போக்கியவாறு; விப்ரஸதி - மத்யகேஹ பட்டரின் மனைவி; ஹொரகிரலு - வேலை விஷயமாக வெளியே சென்றிருக்கையில்; ரோதன - அழுகையிலிருந்து; தப்பிஸலு - தப்பிப்பதற்கு; நிஜ ஸஹஜெயுணிஸித - தன் அக்கா உண்ணச் செய்த; ப்ரப்ரபக்வ - நன்றாக வெந்த; குலித்த - கொள்ளு; புஜிஸி - உண்டு; ஜீர்ணிஸித க்‌ஷணதி - நொடியில் அதனை ஜீர்ணம் செய்தான்; 

பாலகன் வாசுதேவனின் பால லீலைகளை இங்கு சொல்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். குழந்தை பால் குடிப்பதற்காக, ஒரு பசுவை தானம் அளித்த பிராமணருக்கு, விரைவில் ஆசார்யரின் சாஸ்திர ஞானத்தை அளித்தான். தன்னுடைய சக்தியால் தன் குடும்பத்தினரை, பூதத்தின் பயத்தினை போக்கினான். மத்யகேஹ பட்டரின் மனைவி (வாசுதேவனின் தாய்), வேலை விஷயமாக வெளியே சென்றிருக்கையில், அழுகையிலிருந்து தப்புவதற்காக, தன் அக்கா கொடுத்த நன்றாக வெந்த கொள்ளினை உண்டு, நொடிப்பொழுதில் அதனை ஜீர்ணம் செய்தான். 

பாதும் பயாம்ஸி ஷிஷவே கில கோ பிரதோஸ்மை

பூர்வாலய: ஸ்வ ஸுத ஸூனுதயா ப்ரஜாத: |

நிர்வாண ஹேதுமலபிஷ்ட பராத்ம வித்யாம்

தானம் த்ருவம் பலதி பாத்ர குணானுகூல்யாத் ||2-30 

மடில்லாயா என்னும் பிராமணர் குழந்தை பால் குடிப்பதற்காக, மத்யகேஹ பட்டருக்கு, ஒரு பசுவை தானம் அளித்தார். இத்தகைய நற்செயலால், அவர் மறுபடி அவருடைய மகனுக்கே பிறந்து, ஸ்ரீமதாசார்யரின் சாஸ்திரங்களை கற்றறிந்தார். தகுந்தவருக்கு கொடுத்த தானமானது, அதிக பலன்களைத் தரும் என்னும் ஸத் பாத்ர தானவிஷயத்தை இந்த ஸ்லோகம் விளக்குகிறது. 

ஆவிஷ்ய பூருஷமுவாச மஹா க்ரஹோsஸௌ

அஸ்மத் விஹார ஸமயோபகதான் ஸமஸ்தான் |

யச்சக்தி குப்தி ரஹிதானலமஸ்மி ஹந்தும்

லோகேஷ்வர: ஸ பத பால தம: கிலேதி ||2-34 

இந்த குழந்தையினாலேயே நீங்கள் தப்பித்தீர்கள். இது சத்தியம். நீங்கள் அனைவரும் உயிர் பிழைத்திருப்பது, இந்த குழந்தை செய்த புண்ணியத்தாலேயே. இவன் சாதாரண குழந்தையல்ல. உலகத்தை காப்பவன், உலகத்தின் பிராணநாதன் இவனே - என்று இவர்களை தாக்க வந்த பூதத்தின் குரல் கேட்டது. 

கர்தவ்ய மௌட்யமபி பத்ய நிரூப்ய ஸா தம்

ப்ராபோஜயத் கலு குலஸ்த குலம் ப்ர பக்வம் | 2-38 

குழந்தையின் அழுகையை நிறுத்தமுடியாத அந்த சிறுமி, அங்கு வைத்திருந்த கொள்ளினை அக்குழந்தைக்கு கொடுத்தாள். 

ஆரோக்ய ஷாலினி புரேவ ததாபி புத்ரே

விஸ்மேரதாமுப ஜகாம ஜனன்யமுஷ்ய | 2-41 

மகனை நினைத்தவாறு வீட்டிற்கு விரைவாக வந்த தாய், குழந்தை நிரம்பிய வயிறுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தாள். 

குழந்தை வாசுதேவனின் பாலலீலைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***