Friday, February 25, 2022

ஸ்லோகம் #3: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #3: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

பாண்டு3ஸதி மாருதனு முட்டலு க3ண்டு3தனயன படெ3யலா ஷிஷு

2ண்டி3ஸிது ஷதஷ்ருங்க3 கி3ரியனு தனுவ ஸங்க33லி |

தண்ட3தண்டதி3 ராஜகுவரர புண்ட33கி3ஸி த்ருபத34ரணீ

மண்ட3லேஷன குவரி கரகமலக3ள தா கெ3லித3 ||3 

பாண்டுஸதி - பாண்டுவின் மனைவியான குந்திதேவியை; மாருதனு முட்டலு - ஸ்ரீவாயுதேவர் ஸ்பர்ஷம் செய்ய; கண்டுதனய படெயலு - ஆண் மகனை அவள் பெற; ஆ ஷிஷு - அந்தக் குழந்தை (பீமசேனதேவர்); ஷதஷ்ருங்க கிரியனு - ஷதஷ்ருங்க என்னும் மலையை; தனுவ ஸங்கதலி - தன் தேகத்தின் சங்கத்தினால்; கண்டிஸிது - பொடிப்பொடி ஆக்கியது; தண்டதண்டதி - பல சந்தர்ப்பங்களில் (அவ்வப்போது); ராஜகுவரர - துரியோதனன் முதலான அரசகுமாரர்களின்; புண்டடகிஸி - கெட்ட செயல்களை அடக்கி; த்ருபத - துருபதன் (என்னும்); தரணி மண்டலேஷன - பூமியை ஆண்ட அரசனின்; குவரி - மகளின்; கரகமலகள - கைகளை (அவளை); தா கெலித - தான் வென்றான். 

ஸ்ரீமத்வ விஜயத்தில் 1ம் சர்க்கத்தில் 28 முதல் 44 வரையிலான ஸ்லோகங்களில், ஸ்ரீவாயுதேவரின் இரண்டாம் அவதாரரான, ஸ்ரீபீமசேன தேவரின் மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன. அதையே ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் சுருக்கி, இரண்டே ஸ்லோகங்களில் (3&4) இங்கு சொல்லியிருக்கிறார். 

பாண்டுவின் மனைவியான குந்தியை ஸ்ரீவாயுதேவர் ஸ்பர்ஷம் செய்ய, பீமன் என்னும் ஆண் மகனை அவள் பெற்றாள். அந்தக் குழந்தை, தன் தேகத்தின் சங்கத்தினால் ஷதஷ்ருங்க என்னும் மலையை பொடிப்பொடி ஆக்கியது. துரியோதனன் முதலான அரசகுமாரர்கள், பல சந்தர்ப்பங்களில், தனக்கு (பாண்டவர்களுக்கு) தொந்தரவு கொடுக்கையில், அவர்களுடைய கெட்ட செயல்களை அடக்கி, பின், த்ருபதன் என்னும் அரசனின் மகளான திரௌபதியினை, (சுயம்வரத்தில்) தான் வென்றான். 

தஸ்யைவ வாயோரவதாரமேனம்

ஸந்தோ த்விதீயம் ப்ரவதந்தி பீமம் || (1-28) 

ஸ்ரீவாயுதேவரின் இரண்டாவது அவதாரமே பீமசேனதேவர். த்வாபர யுகத்தில் தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக, ஸ்ரீவாயுதேவர் குந்திதேவியிடம் பீமனாக அவதரித்தார். குழந்தையான பீமன், குந்திதேவியின் கையிலிருந்து தவறி கீழே விழ, அங்கிருந்த ஷதஷ்ருங்க மலை உடைந்து தூள்தூள் ஆனது.

 இதையே ஸ்ரீஸ்ரீபாதராஜர், மத்வ நாமா #13ம் ஸ்லோகத்தில், பின்வருமாறு கூறினார். 

கரதிந்த சிசுபாவனாத பீமன பிடலு

கிரிவடெது ஷதஸ்ருங்க வெந்தெனிஸிது || 

அடுத்து, ‘தண்டதண்டதி ராஜகுவரர புண்டடகிஸி’ - துரியோதனன் முதலான அரசகுமாரர்களின் கெட்ட செயல்களை மத்வ விஜயத்தில், ஸ்ரீநாராயண பண்டிதாசார்யர் மிகவும் அழகாக வர்ணித்துள்ளார். 

பீமசேனதேவரின் அதிபராக்ரம வைபவங்களை காணப் பொறுக்காத துரியோதனன், காலகூட விஷத்தை உணவில் கலந்தும், விஷப் பாம்புகளை விட்டு பீமசேனதேவரை கடிக்கச் செய்தும், கங்கை நதியில் மிகவும் அதிகமான ஆழமுள்ள பிரமாண கோடிஎன்னும் மடுவில் தள்ளி விட்டும், கொல்ல முயற்சி செய்தான். இந்த அனைத்து ஆபத்துகளிலிருந்தும், பீமசேனதேவர் மிகவும் அனாயாசமாக தப்பி வந்தார். உலகிற்கே பிராணனான, உயிர் நாடியாக விளங்குபவரை, யார் என்னதான் செய்து விட முடியும்?. 

பிரமாண கோடே: ஸ ஹி ஹேளயாகாத்

நேதம் ஜகஜ்ஜீவன தேத்ர சித்ரம் || (1-31). 

ஸ்ரீபீமசேனதேவரின் பால லீலைகளை மத்வ நாமா இவ்வாறு சொல்கிறது.

குருப கரளவனிக்கெ நெரெயுண்டு தேகி ஹஸி

துருககள ம்யாலே பிடலவனொரெஸித || (14)

பீமசேனதேவரின் வலிமையைக் கண்டு, அசுரர்களான துரியோதனாதிகளுக்கு அவர் மேல் துவேஷம் உண்டாயிற்று.

அடுத்து திரௌபதி சுயம்வரம்.

ஸ ஸோதரோsதாsதித ராஜ ஹம்ஸ:

ஸ ராஜ ஹம்ஸீமிவ ராஜ கன்யாம் ||(1-24)

கொக்குகள், காக்கைகள் போன்ற சாதாரண பறவைக் கூட்டங்களை புறக்கணித்து, ஒருவன் அழகான உன்னதமான ராஜஹம்ஸத்தை அடைவதைப் போல, பீமசேனதேவர், துருபத ராஜனின் மகளான திரௌபதியை மணந்தார். 

பல்லிதஸுரர கெலிது திரௌபதிய கைபிடிது

யல்ல ஸுஜனரிகெ ஹருஷவ தோரித (15) 

ஸ்ரீவேதவ்யாஸ தேவரின் ஆணைப்படி பாஞ்சால நகரத்தில் திரௌபதியின் சுயம்வரத்தில் அவரைக் கைபிடித்து, சஜ்ஜனர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார் பீமசேனதேவர். 

****

Thursday, February 24, 2022

ஸ்லோகம் #2: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #2: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

வனதி4யலி ஸேதுவெய கட்டுத த3னுஜரனு ஸதெ33டி3து33ஷரத2

தனயஸதி நீடி33 ஸுமாலிகெயனுக்3ரஹவ படெ3து3 |

வனஜநிலயள வல்லப4ன பத3 வனஜவு ஹ்ருத3யத3லி ஸந்தத

மனனத3லி கிம்புருஷத3லிஹ ஹனுமனனு ப4ஜிபெ1 ||2 

வனதியலி - கடலில்; ஸேதுவெய கட்டுத - பாலத்தைக் கட்ட உதவி செய்து; தனுஜரனு ஸதெபடிது - அசுரர்களைக் கொன்று; தஷரத தனயஸதி - தசரதனின் மகனின் மனைவி (ஸீதை); நீடித - கொடுத்த; ஸுமாலிகெய - ரத்ன மாலையை; அனுக்ரஹவ படெது - அவளின் அருளைப் பெற்று; வனஜநிலயள - தாமரையில் அமர்ந்திருப்பவளின்; வல்லபன - தலைவனின்; பத வனஜவு - பாத கமலங்களை; ஹ்ருதயதலி - தன் இதயத்தில்; ஸந்தத மனனதலி - எப்போதும் மனதில் தியானம் செய்தவாறு; கிம்புருஷதலிஹ - கிம்புருஷ கண்டத்தில்; இஹ - (இன்றைக்கும்) இருப்பவரான; ஹனுமனனு பஜிபெ - ஹனுமந்ததேவரை வணங்குகிறேன். 

ஹனுமந்ததேவரின் மகிமைகள் தொடர்கின்றன. ஸ்ரீராமனுக்கு பாலம் கட்ட உதவி செய்து, இலங்கையில் போரிட வந்த அசுரர்களைக் கொன்று, (ஸ்ரீராம ஸீதையுடன் அயோத்திக்கு திரும்பி வந்து), ஸீதை அருளிக் கொடுத்த ரத்மனாலையை ஏற்று, ஸ்ரீராமனின் பாத கமலங்களை தன் மனதில் நிறுத்தியவாறு, ஸ்ரீராமனின் தியானத்தை செய்தவாறு, இன்றும்கூட கிம்புருஷ கண்டத்தில் இருக்கும் ஸ்ரீஹனுமந்ததேவரை நான் வணங்குகிறேன். 

நிபத்ய ஸேதும் ரகுவம்ஷ கேது

ப்ரூபங்க ஸம்ப்ராந்த பயோதி மத்யே || (1-17)

கடலில் பாலம் கட்ட உதவினார் ஹனுமந்ததேவர். 

ஆத்வர்யவம் யுத்த மகே ப்ரதிப்ர (1-18). ராம ராவண யுத்தம் என்னும் யாகத்தில், லட்சமணன் ரித்விக்காக இருந்து யாகத்தை நடத்த, ஹனுமந்ததேவர் அவருக்கு துணையாக தலைமை ரித்விக்காக விளங்கினார் என்று மத்வவிஜயகாரர் விளக்குகிறார். 

இப்படியான போரினை முடித்துவிட்டு, ஸ்ரீராம ஸீதையுடன், ஹனுமந்ததேவர் அயோத்திக்கு திரும்பி வந்தார். பரம மங்கள மூர்த்தியான ஸ்ரீராமனை, பல காலம் சேவித்த ஹனுமந்தனுக்கு ஸீதாதேவி ஒரு ரத்னமாலையைக் கொடுத்து அருளினாள். 

ராமஸ்ய வாண்யா மணி மஞ்சுமாலா

வ்யாஜேன தீர்க்காம் கருணாம் பபந்த || (1-22) 

விஜயரகுபதி மெச்சி தரணிஸுதெயளகீயெ

பஜிஸி மௌக்திகத ஹாரவனெ படெத (11) 

இந்த மத்வவிஜய ஸ்லோகத்திலும், மத்வ நாமா ஸ்லோகத்தில் இதே விஷயம் சொல்லப்பட்டுள்ளது. 

கிம் வர்ணயாம பரமம் பிரஸாதம்

ஸீதாபதேஸ்தத்ர ஹரி ப்ரபர்ஹே || (1-26) 

அஜபதவியனு ராம கொடுவெனெனெ ஹனுமந்த

நிஜபகுதியனெ பேடி வரவ படெத (11) 

தனது பக்தனுக்கு பிரம்ம பதவியைக் கொடுக்கிறேன் என்று ஸ்ரீராமன் முன்வந்தபோது, ஹனுமந்ததேவர் தனக்கு திடமான பக்தியை மட்டும் கொடுக்க வேண்டும் என்று வேண்டினார். அதையே வரமாகக் கேட்டார். அதன்படியே, இன்றும் கிம்புருஷ கண்டத்தில் இருந்தவாறு, ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு, அங்குள்ள மக்களையும் ஸ்ரீராம நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடச் செய்தவாறும் இருக்கிறார். 

இப்படிப்பட்ட மகிமைகளைக் கொண்ட ஹனுமந்ததேவரை, நான் வணங்குகிறேன் என்று ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் சொல்லி, ஹனுமந்ததேவரின் மகிமையை முடித்து, அடுத்த ஸ்லோகத்தில் பீமசேனதேவரின் அவதாரத்தை விளக்குகிறார். 

***

Wednesday, February 23, 2022

ஸ்லோகம் #1: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

லகுமிவல்லப4னாக்3ஞெயனு தா முகுடத3லி வஹிஸுதலி ஸுரவர

நிகரவந்தி3தசரண கபிரூபவனெ தா தாளி |

லகுமி ஸீதெகெ3 ராமசரிதெக3ளகி2லதி3ம் ஸந்தஸவ புட்டிஸி

ஷகுதியிந்த3லி வனதி3 லங்கி4ஸி ரகு4வரன நமிஸி ||1

லகுமிவல்லபன - ஸ்ரீலட்சுமியின் தலைவனான நாராயணனின்; ஆக்ஞெயனு - ஆணையை; தா - தான்; முகுடதலி - தலையில்; வஹிஸுதலி - தாங்கியவாறு; ஸுரவர - சிறந்தவர்களான (ஸ்ரேஷ்டர்களான) தேவதைகளின்; நிகர - கூட்டம்; வந்தித சரண - வணங்கப்படக்கூடிய பாதங்களை (கொண்டவன்); கபி ரூபவனே - ஹனுமந்த ரூபத்தை; தா தாளி - தான் எடுத்து; லகுமி ஸீதெகெ - ஸ்ரீலட்சுமியின் அவதாரமான ஸீதைக்கு; ராமசரிதெகளகிலதிம் - ராம சரிதைகள் போன்றவற்றைக் கூறி; ஸந்தஸவ புட்டிஸி - நம்பிக்கையை ஊட்டி; ஷகுதியிந்தலி - தன் வலிமையினால்; வனதி - அசோக வனத்தினை; லங்கிஸி - அழித்து; ரகுவரன நமிஸி - ஸ்ரீராமனை வணங்கி;ஸ்ரீலட்சுமியின் தலைவனான நாராயணனின் ஆணையை, தன் தலையில் ஏந்தியவாறு, ஸ்ரேஷ்டர்களான தேவதைகளின் கூட்டத்தால் வணங்கப்படக்கூடிய பாதங்களைக் கொண்டவரான ஸ்ரீவாயுதேவர், தான் ஹனுமந்த ரூபத்தை எடுத்து, ஸ்ரீலட்சுமியின் அவதாரமான ஸீதைக்கு (அசோக வனத்தில்) ராம சரிதைகள் போன்றவற்றைக் கூறி, நம்பிக்கையை ஊட்டி, தன் வலிமையினால் அசோக வனத்தினை அழித்து, ஸ்ரீராமனை வணங்கியவாறு (அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறது). 

மத்வ விஜயத்தில் 1ம் சர்க்கத்தில் 9 முதல் 27ம் ஸ்லோகங்கள் வரை, ஸ்ரீவாயுதேவரின் முதல் அவதாரமான ஹனுமந்ததேவரின் மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன. இதையே ஸ்ரீவித்யா பிரசன்ன தீர்த்தர் இங்கு முதல் இரண்டு ஸ்லோகங்களில் சுருக்கி கொடுத்துள்ளார். 

ஸ்ரீவாயுதேவர் தமது முதல் அவதாரத்தில் த்ரேதாயுகத்தில் ஹனுமனாக கேஸரி என்ற வானர வீரருக்கும், அஞ்சனா தேவி என்ற வானரப் பெண்மணிக்கும் குமாரராக அவதரித்தார். முக்ய பிராணர், அஞ்சனா தேவியை ஸ்பர்சம் செய்த மாத்திரத்தில் ஹனுமந்ததேவர் அவதரித்தார். இந்த வானரக் குழந்தை, பிற்காலத்தில் அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாகவும், மாபெரும் பக்திமானாகவும், ஒளி பொருந்தியவனாகவும் விளங்குவான்என்று ஞானிகள் கூறினர். இதையே இந்த மத்வ விஜய ஸ்லோகம் விளக்குகிறது. 

யே யே குணா நாம ஜகத் பிரஸித்தா:

யம் தேஷு தேஷுஷ்ம நிதர்ஷயந்தி |

ஸாக்‌ஷான் மஹாபாகவத பிரபர்ஹம்

ஸ்ரீமந்தமேனம் ஹனுமந்தமாஹு: (1-10) 

உலகத்தில் உள்ள அனைத்து நற்குணங்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு என்றால், அது ஹனுமான் (ஹனு என்றால் ஞானம், எல்லையில்லா ஞானம் கொண்டவர் ஹனுமான்) என்று சொல்லலாம். 

தரணி ஸுதனனு காயிது ஷரதியனு ந்யரெதாடி

தரணிஸுதெயள கண்டு தனுஜரொடனெ |

பரதி ரணவனெ மாடி மெலிது திவ்யாஸ்த்ரகள

புரஹிலங்கெய பந்த ஹனுமந்தனு || 

ஸ்ரீஸ்ரீபாதராஜர் இயற்றிய மத்வ நாமா, ஸ்லோகம் #8ல், இதே விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இத்தகைய மகிமைகளைக் கொண்ட ஹனுமந்ததேவர், ஸ்ரீராமனால் விடப்பட்ட பாணத்தைப் போல, கடலைத் தாண்டி, இலங்கையில் பிரவேசித்து, ஸீதையை சந்தித்து, சூடாமணியைப் பெற்று, அசோக வனத்தை அழித்து, மறுபடி கடலைத் தாண்டி வந்து, ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கினார். 

சிறப்புக் குறிப்பு: 

1. மத்வவிஜயத்தில் முதல் 8 ஸ்லோகங்களின் ஸாரம் இவ்வாறாக உள்ளது. 

காந்தாய கல்யாண குணைகதாம்னே நவத்யுனாத ப்ரதிமப்ரபாய |

நாராயணாய அகிலகாரணாய ஸ்ரீபிராண நாதாய நமஸ்கரோமி || (1-1) 

இந்த உலகத்திற்கு நிமித்த காரணனான (efficient cause - அனைத்து மாற்றங்களுக்கும் காரணனான), ஸ்ரீ மற்றும் பிராணதேவருக்கு தலைவனான, மனதை மகிழ்விக்கும்படியான அழகினைக் கொண்ட ஸ்ரீமன் நாராயணனை வணங்கி, முதல் ஸ்லோகத்தில் வியாஸ-கிருஷ்ண ரூபங்களை வணங்கியிருக்கிறார். பிறகு, ஸ்ரீமதாசார்யரின் புகழ் நம் அனைவரின் அஞ்ஞானத்தையும் போக்கி, சுத்தமான ஞானத்தை வழங்கட்டும் என்று வணங்குகிறார். வணங்குதலுக்குரிய தம் தந்தை மற்றும் குருவான ஸ்ரீத்ரிவிக்ரம பண்டிதாசார்யரை வணங்கி, குருபக்தி மிகவும் முக்கியம், இதிலிருந்தே ஹரிபக்தி, ‘முகுந்தபக்த்யை குருபக்திஜாயை’ (1-5) ஆகவே, ஜகத்குருவான வாயுதேவரின் அவதார லீலைகளை வர்ணிக்கிறேன் என்று சங்கல்பம் செய்கிறார். தாம் மந்த்ரவர்ணை: அனுவர்ணனீயாம் சர்வேந்த்ர பூர்வைரபிவக்து காமே’ (1-6) மிகவும் மகிமை பொருந்திய வாயுதேவரின் லீலைகளை வர்ணிப்பது, வேத மந்திரங்களைவிட அழகானது. ருத்ரர் முதலான தேவர்களாலும் வர்ணிக்கப்படுபவை. இதை விளக்குவது தமது தகுதிக்கு அப்பாற்பட்டது என்று தனது தன்னடக்கத்தை வெளிப்படுத்தி, எவ்வளவு முடியுமோ அதற்கேற்ப குருகளின் மகிமைகளை வர்ணித்து மனோவிசுத்தை சரிதானுவாத:’ (1-7), அத்தகைய குருகளின் வர்ணனை நமது மனங்களை சுத்திப்படுத்தட்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். 

2. ஸ்ரீமத் ஸுமத்வ பிரமேய மாலிகா என்னும் சிறிய கிருதியை இயற்றிய மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், மத்வ விஜயத்தின் 16 சர்க்கங்களை படிப்பதன் பலன்களை சிறப்பாக இதில் கூறியிருக்கிறார். இந்த முதல் சர்க்கத்தின் ஸ்லோகமும், பலனும் இவ்வாறு: 

ஸ்ரீமத்4வவிஜயே ஸர்கா3: ஷோட3ஷானுக்ரமாத3ஹம் |

தேஷாம் ப்ரமேயம் வக்‌ஷ்யாமி ஸங்க்3ரஹேண ப2லம் ததா2 ||1|| 

ஸ்ரீமத்வவிஜயத்தில் 16 சர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றின் ஆதாரங்களை மற்றும் ஒவ்வொரு சர்க்கங்களின் பலன்களை இங்கு தொகுத்து சொல்கிறேன். 

3ளித்தேத்யாதி3 ஸூக்தோக்தம் வாயோ ரூபத்ரயம் பரம் |

ப்ரத2மே ப்ரத2மம் ப்ரோக்தம் த்3விதீயம் து தத: பரம் ||2|| 

பளித்தா சூக்தம், பவமான சூக்தம், இவையே முதலான சூக்தங்களில் வாயுதேவரின் மூன்று அவதாரங்களின் மகிமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. முதலாம் சர்க்கத்தில் முதலாம் அவதாரரான ஸ்ரீஹனுமந்த தேவரின் மகிமைகளை, பிறகு இரண்டாம் அவதாரரான ஸ்ரீபீமசேன தேவரின் மகிமையை சொல்லியிருக்கிறார். 

ஸன்னிதா4னம் கு3ணவ்யக்தி: ஸ்வரூபஸ்ய நிபோ34னம் |

ஸாத4னை: ஷோப4னை: கீர்த்தி: ஷாஸ்த்ர ராஜ்யாபி4ஷேசனம் ||18|| 

ஸ்ரீமத்சுமத்வவிஜய பாராயணத்தால் வரும் பலன்:

முதல் சர்க்கம் : ஸ்ரீஹரிவாயு குருகளின் சன்னிதானம்

 ***