Friday, June 2, 2023

#172 - 504-505-506 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

504. ஸ்ரீ கோ3பதயே நம:

வே3தவாக்யக3ளிகெ3 ஸ்வாமிகோ3பதிநமோ எம்பெ3

ஸ்ரீத4ரா து3ர்கா3தி3 நாமளு ரமாபதியு நீனு

ஸீதாயுக் ஸ்ரீராம கிருஷ்ண ப்ருது2 ராஜராஜேஶ்வர

க்ஷிதி நாக1 தே4னுக3 பதியு கோ3பதி நீனு 

வேத வாக்கியங்களால் போற்றப்படுபவனே. கோபதயே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீதரனே. துர்கா முதலான பெயர்களைக் கொண்ட ரமாதேவியின் தலைவன் நீயே. சீதையுடனான ஸ்ரீராமனே. கிருஷ்ணனே. ராஜராஜேஶ்வரனே. பூமியில் உள்ள அனைத்து பசுக்களின் தலைவன் நீயே. 

505. ஸ்ரீ கோ3ப்த்ரே நம:

ரிஷிக3 ஸம்ரக்ஷிஸுவகோ3ப்தாநமோ நினகெ3

ரக்ஷண கர்த்ருத்வமுக்2யவாகி3 நின்னதே3வே ஸ்வாமி

ரக்ஷிஸுவி ப்ராணிக3 ஸர்வ அவஸ்தெ23ளல்லி

ரக்ஷகனு ஸர்வ முக்தாமுக்த ஆஸ்ரயனு ஸ்ரீ 

ரிஷி முனிவர்களை காப்பவனே கோப்த்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காப்பவன் நீயே ஸ்வாமி. அனைத்து ப்ராணிகளையும் அனைத்து நிலைகளிலும் நீ காப்பாயாக. முக்தர்கள், அமுக்தர்கள் என அனைவருக்கும் நீயே ஆதரவாக இருக்கிறாய். 

506. ஸ்ரீ ஞானக3ம்யாய நம:

ஞானாதி3 மஹாத்ம்ய பூர்ண நிதி4யாகி3ருவவனு

ஞானக3ம்யனுநீனு நமோ எம்பெ3 ஸதா3 நினகெ3

ஞானிப4க்தருக3ள்கெ3 நீ ப்ராப்யனாகி3ருவிமித்2யா

ஞானேனச தமோஞானேனைவ பரம்பத3ம்க3ம்ய 

ஞானாதி அனைத்து நற்குணங்களையும் முழுமையாகக் கொண்டிருப்பவன் நீயே. ஞானகம்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஞானிகளுக்கு, பக்தர்களுக்கு நீ அடையத் தக்கவனாக இருக்கிறாய்.


***


No comments:

Post a Comment