Wednesday, June 21, 2023

#191 - 561-562-563 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

561. ஸ்ரீ கிருஷ்ணாய நம:

ஸஜ்ஜனரிகெ3 மனோஹரக்ருஷ்ணனேநமோ எம்பெ3

4ஜக 4க்தரிகெ3 ஸகலேஷ்ட சிந்தாமணியு

ராஜிஸுவ ஹரின்மணி நிப4 ஸௌந்தர்யஸாரனு

ஜக3தேக3வந்த்3யனு பை4ஷ்மிஸத்யாஸமேத ஸர்வே 

ஸஜ்ஜனர்களின் ப்ரியனே கிருஷ்ணனே, உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னை வணங்கும் பக்தர்களுக்கு அனைத்து இஷ்டார்த்தங்களையும் நிறைவேற்றும் சிந்தாமணியே. ஒளிரும் மரகதத்தை அணிந்த ஸௌந்தர்யனே. அனைத்து உலகத்தவர்களாலும் வணங்கப்படுபவனே. பைஷ்மி ஸத்யபாமா ஸமேதமாக இருப்பவனே. ஸர்வேசனே. 

562. ஸ்ரீ த்3ருடா4 நம:

ஸ்வப4க்தரனு 3லிஷ்டராகி3 மாள்பத்3ருடநமோ

அபரிமித தா3ர்ட்4யப3 பூர்ண நித்ய ஸ்வதந்த்ர

அப்ராக்ருத 3லி த்3ருடனு ப்ராக்ருத ஸ்தூ2லனல்ல

ஸுபர்வாணாதி சராசரத3 தா3ர்ட்4 நின்னாதீ4 

தன் பக்தர்களை சிறந்தவர்களாக ஆக்குபவனே, த்ருடனே, உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான திடம், வலிமை, நித்யானந்தத்தைக் கொண்டவனே. ஸ்வதந்த்ரனே. அப்ராக்ருத சரீரத்தைக் கொண்டவனே. ப்ராக்ருத, ஸ்தூல தேகம் இல்லாதவனே. புல் முதற்கொண்டு சராசர வஸ்துக்கள் அனைத்தும் உன்னுடைய அதீனமே. 

563. ஸ்ரீ ஸங்கர்ஷணாய நம:

4க்தது3ரித பரிஹார க்ருத்ஸங்கர்ஷணநமோ

உத்தம ரீதியலி கர்ஷண ஶீலனாகி3ருவி

உத்தமத்வ ஸாரத்வதி3ஸம்தீ3ப்தமத்வதி3ம்

ஷட்கு3ணைஶ்வர்யஷம்ஸுக23லவஶிஜயே 

பக்தர்களின் துக்கங்களை பரிகரிப்பவனே. ஸங்கர்ஷணனே. உனக்கு என் நமஸ்காரங்கள். மிகவும் சிறந்த வகையில் பக்தர்களை ஈர்ப்பவனே. சிறந்த முறையில் ஸாரத்வத்தை வகித்ததால் ‘ஸம்; அபாரமான ஒளியைக் கொண்டிருப்பதால் ‘க; ஷட்குணைஸ்வர்ய ஸம்பன்னன் ஆகையால் ‘ஷம்; சுக பலன்களை அளிப்பதால் ‘ண என்று ‘ஸங்கர்ஷணன் ஆனவனே; 

***


No comments:

Post a Comment