ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
525. ஸ்ரீ முகுந்தா3ய நம:
முக்தி கொடு3வவ நீனு ‘முகுந்த3’ நமோ நினகெ3
ஶ்வேதத்3வீப அனந்தாஸன வைகுண்ட இந்த2 ஸ்தா2ன
முக்தரிகெ3 இத்து ஸ்வஸ்வரூபானந்த3 போ4க3வனு
ஒத3கி3ஸுவி முக்தரு நின்ன அதீ4னராகி3ஹரு
முக்தியை அருள்பவன் நீயே. முகுந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வேதத்வீப, வைகுண்ட, அனந்தாஸன இந்த இடங்களை முக்தர்களுக்கு அளித்து, ஸ்வஸ்வரூபானந்த போகத்தினை அவர்களுக்கு கொடுக்கிறாய். முக்தர்களும் உன்னுடைய அதீனராகவே இருக்கின்றனர்.
526. ஸ்ரீ அமித விக்ரமாய நம:
அமித பராக்ரம ‘அமித விக்ரமனே’ நமோ
ஆம்னாயகு1 அமித ஸாகல்யேன அவிக்ஞாதனு
அமல நின்னய கு3ண பராக்ரம விபாரூட4
ஸுமனோஹர ஸுக2ஞானரூப ஜக3தா3தா4ர
அபாரமான வீரத்தை கொண்டவனே. அமித விக்ரமனே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதங்களாலும் முழுமையாக அறியப்பட முடியாதவனே. உன்னுடைய குணங்கள் அபாரமானவை. வீரனே. கருட வாகனனே. மனோஹரனே. சுக, ஞான ரூபனே. உலகத்திற்கே ஆதாரனே.
527. ஸ்ரீ அம்போ4நித4யே நம:
ஆதா4ரனு நீ ப4க்தரிகெ ‘அம்போ4நிதி4’ நமஸ்தே
ஆதா4ரனு சதுர்த3ஶ பு4வனக்கெ கூர்ம ரூப
ஸிந்து4 இவ கா3ம்பீ4ர்யாதி3 கு3ணவந்த ஸுரவ்ருந்த3
ஆதா4ர ஸ்வப்ரகாஶ அஜர ஆனந்த3 தேஜ:புஞ்ச
பக்தர்களுக்கு நீயே ஆதாரம். அம்போநிதியே உனக்கு என் நமஸ்காரங்கள். ஈரேழு புவனத்திற்கு நீயே ஆதாரமானவன். கூர்ம ரூபனே. அபாரமான குணங்களைக் கொண்டவனே. தேவர்களுக்கும் நீயே ஆதாரம். ஸ்வப்ரகாஶகனே. எல்லையற்ற ஆனந்தத்தைக் கொண்டவனே. தேஜஸ் கொண்டவனே.
No comments:
Post a Comment