ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
579. ஸ்ரீ ஸுத4ன்வனே நம:
ஶத்ருக3ள கார்யதி3ந்த3வுள்ள ‘ஸுத4ன்வா’ நமோ
கார்ய எந்த3ரெ க்ரௌர்யதி3ந்த3 இருவ ப3லிஷ்டனு
உருப3லஸுஶோப4ன ஶார்ங்க்3ய த4னுர்த4ர நீனு
பரஶுராமனே ஸீதாஸமேத ஸ்ரீராமசந்திர
எதிரிகளை அழிப்பதற்காக இருக்கும் ஸுதன்வனே உனக்கு என் நமஸ்காரங்கள். இத்தகைய செயல் என்றால் பயங்கரமாக இருக்கும் வீரனே. வீரனே. மங்களங்களை அருள்பவனே. ஸாரங்க என்னும் தனுஸ் ஏந்தியவனே. பரசுராமனே. ஸீதா சமேத ஸ்ரீராமசந்திரனே.
580. ஸ்ரீ க2ண்ட3பரஶவே நம:
வஜ்ராத்3யாயுத4தி3ம் ஶத்ரு நாஶக ’க2ண்ட3பரஶு’
ஶிரபா3கி3 நமோ எம்பெ3 கொட3லு வஜ்ராத்3தா4யுத3
பரஶு எந்தெ3னிபுது3 ஆத்3த3ரிந்த3 க்ரூரஜாரி
க்ரு ந்ருபர தரிது3 லோகஸஜ்ஜனர பொரெதி3
உன் வஜ்ராயுதத்தினால் எதிரிகளை அழிப்பவனே. கண்டபரஸுவே உனக்கு என் நமஸ்காரங்கள். வஜ்ராயுதம் ஏந்தியிருப்பதால், க்ரூரமான துஷ்டர்களை, எதிரிகளை அழித்து, உலகத்தில் இருக்கும் ஸஜ்ஜனர்களை நீ காக்கிறாய்.
581. ஸ்ரீ தா3ருணாய நம:
கோ4ரரூப ப்ரகடிஸுவி ‘தா3ருண’ நமோ எம்பெ3
க்ரூர ஶத்ருக3ள்கெ3 கோ4ரரூப ப4க்தரிகெ ஸௌம்ய
ஹொரகி3ன ஒளகி3ன ஶத்ருதா4ரண மாடி3
பொரெயுவி ப4க்தரனு தா3னவர ஸிம்ஹ ஸ்ரீஶ
உன் கோரமான ரூபத்தை வெளிப்படுத்துபவனே. தாருணனே உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளுக்கு கோர ரூபம் ஆனால் உன் பக்தர்களுக்கு ஸௌம்ய / சாந்தமான ரூபமே காட்டுகிறாய். வெளியே & உள்ளே இருக்கும் எதிரிகளை அழித்து பக்தர்களை காப்பாய். நரஸிம்ஹனே. ஸ்ரீலட்சுமி தேவியின் தலைவனே.
***
No comments:
Post a Comment