ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
555. ஸ்ரீ க3ஹனாய நம:
கு3ஹ்ய ப்ராப்தி மாடு3வ ‘க3ஹன’ நமோ நமோ எம்பெ3
மஹிஸ்ரீ ஸமேத ஸ்ரீமன் நாராயண அப்3தி4கே3ஹ
மஹா உதா3ரகருணி ஸாகல்ய ‘ஞாதுமஶக்ய
தே3ஹினாம் அந்த த்3ருவாய அனபலப்4ய வர்த்மனே’
தியானங்களால் அடையப்படுபவனே. கஹனனே, உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியுடன் ஸ்ரீமன் நாராயணனான பாற்கடலில் படுத்திருப்பவனே. மிகவும் கருணை உள்ளவனே. முழுமையாக புரிந்து கொள்ளப்பட முடியாதவனே.
556. ஸ்ரீ கு3ப்தாய நம:
கு3ப்தரக்ஷக நமோ கூ3ட4ஞானி த்4ருட ப4க்தர
ஆப்தனாகி3 ரக்ஷிஸுதி ஶிலெயொளு ‘கு3ப்த’ ஶீல
பதிவ்ரதெ அஹல்யன்ன ரக்ஷிஸிதி3 ராமசந்த்ர
அத4மரு அயோக்3யரிகெ3 ஆச்சாதி3தனாகி3ஹி
உன் பக்தர்களை காப்பவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான ஞானி, த்ருட பக்தர்களின் நண்பனாகி, அவர்களை காக்கிறாய். சிலைகளில் மறைந்திருக்கிறாய். குப்தனே. சிறந்த பதிவிரதைகளான அகலிகையை காத்தவனே, ஸ்ரீராமசந்திரனே. அதமர்கள், அயோக்யர்களுக்கு, மறைந்திருக்கிறாய்.
557. ஸ்ரீ சக்ரக3தாத4ராய நம:
த4னாதி3க3ள கொடு3வவனு ப4க்தேஷ்ட ப்ரஜெக3ள
நீனு போஷிஸுவி ‘சக்ரகதா4த4ர’ நமோ எம்பெ3
இனக3தி4க தேஜஸ்விசக்ர ப3லாட்3யக3தெ3ய
நீனு த4ரிஸிருவி நரகாஸுராத்3யர ஹந்தா
உன் பக்தர்களுக்கு, தனாதி இஷ்டார்த்தங்களை அருள்பவனே. சக்ரகதாதரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சூரியனைவிட அதிக ஒளியினை பெற்றிருப்பவனே. சக்ர, பலமான கதை ஆகியவற்றை நீ தரித்திருக்கிறாய். நரகாசுரன் முதலான தைத்யர்களை கொன்றவனே.
***
No comments:
Post a Comment