ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
528. ஸ்ரீ அனந்தாத்மனே நம:
ப4க்தரலி ரோஷ மாட3லாரி தா3னமாடு3வி நீ
உதா3ர ரக்ஷக ‘அனந்தாத்ம’ நமோ எம்பெ3
வஸ்துகு3ண காலதே3ஶ நிரோத4 பரிச்சேத3வு
எந்த2 ப3ந்த4வு இல்லத3 ஸ்வராட் நீ ப4க்தமுக்தேஶ
பக்தர்களை நீ ஏமாற்ற மாட்டாய். (ஞான பக்தி ஆகியவற்றை) தானம் செய்பவனே. கருணைக்கடலே. அனந்தாத்மனே. உனக்கு என் நமஸ்காரங்கள். யதார்த்த குணங்களை பெற்றவனே. கால, தேசத்திற்கு அப்பாற்ப்பட்டவனே. எந்த பந்தனமும் இல்லாதவன் நீ. பக்தர்களுக்கு முக்தியை கொடுப்பவன் நீயே.
529. ஸ்ரீ மஹோத3தி4ஶயாய நம:
மஹா உத்க்ருஷ்ட ப3ஹள ஸுக2ப்ராபகனு நீனு
‘மஹோத3தி4ஶயனே’ நமோ ஶரணு ஸுக2பூர்ண
ஸுஹோம ப்ராதஸ்த2 த3தி4 அன்ன கையல்லி மொஸரு
ப்3ரம்மனத3 வாமன க்ருஷ்ணாப்3தி4ஶாயி நாராயண
அபாரமான வீரனே. அற்புதமான சுகத்தை கொண்டவனே. மஹோததிஶயனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சுகபூர்ணனே. பால் அன்னம், தயிர் ஆகியவற்றை உனக்கு சமர்ப்பிக்கிறேன். பிரம்மனால் வணங்கப்படுபவனே. வாமனனே. பாற்கடலில் படுத்திருப்பவனே. நாராயணனே.
530. ஸ்ரீ அந்தகாய நம:
வாஞ்சிதவ ஸுரிஸுவுது3 மொத3லாத3வுக3ள
நிஸ்சயதி3 மாள்ப ‘அந்தக’ நமோ நமோ ஶரணு
ஸஞ்சிதவு ஸுட்டு ஆகா3மி அண்ட3தெ3 தடெது3 நீ
கொஞ்சமாள்பி ப்ராரப்3த4 ஶத்ருஹர ப4க்தேஷ்டதா3தா
இஷ்டார்த்தங்களை அருள்வது முதலானவற்றை கண்டிப்பாக செய்பவனே. அந்தகனே. உனக்கு என் நமஸ்காரங்கள். முற்பிறவிகளின் கர்மங்களை சுட்டு; இதுவரை செய்த பாவங்களை தடுத்து; நீ ப்ராரப்தத்தை குறைப்பாய். எதிரிகளை அழிப்பவனே. பக்தர்களின் இஷ்டத்தினை நிறைவேற்றுபவனே.
***
No comments:
Post a Comment