ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
531. ஸ்ரீ அஜாய நம:
நின்னய ரத2கெ அஶ்வக3ளன்னு யோஜனெ மாள்பி
நீ ‘அஜ’ நமோ நினகெ3 தே3ஹ ரத2 நீ ரதி2க
‘அ’ எந்த3ரெ பி3ரம்மாக்2ய நிர்தோ3ஷ கு3ணபூர்ண விஷ்ணு
‘ஜ’ எந்த3ரெ ஹுட்டில்லத3 நீ ஜக3ஜன்மாதி3கர்தா
உன்னுடைய ரதத்திற்கு குதிரைகளை நீயே தேர்ந்தெடுக்கிறாய். ஹே அஜனே, உன்னை நான் வணங்குகிறேன். இந்த தேகம் என்னும் ரதத்திற்கு நீயே ரதிகன் (தேரோட்டி). அ என்றால், பிரம்மாதிகளால் வணங்கப்படும், தோஷங்கள் அற்றவனான, குணபூர்ணனான, விஷ்ணு; ஜ என்றால், பிறப்பு அற்றவனான நீ, உலகில் அனைவரின் பிறப்பிற்கும் காரணம் ஆனவன்.
532. ஸ்ரீ மஹார்ஹாய நம:
க4னஶ்ரேஷ்ட யோக்3யவு ஆகி3ருவ ஸோம எம்ப3
அன்னவான் ‘மஹார்ஹ’ நமோ நமோ எனுவெ நினகெ3
விஷ்ணு ஸர்வோத்தம யக்ஞ நாம யக்ஞபுக் பூஜ்யனு
நினகெ3 ஸமரில்ல நீனேவெ மஹான் ப்ரதா4னனு
அபாரமான யோக்யதையைக் கொண்டிருப்பவனே, ஸோம எனப்படும் அன்னவான் (அனைவரும் அன்னத்தை அளிப்பவனே), மஹார்ஹனே, உனக்கு என் நமஸ்காரங்கள். விஷ்ணு ஸர்வோத்தம என்னும் யக்ஞத்தில், நீயே யக்ஞபுக், பூஜ்யனாக இருக்கிறாய். உனக்கு சமம் என்று யாரும் இல்லை. நீயே ஸர்வோத்தமன். முக்கியமானவன்.
533. ஸ்ரீ ஸ்வாபா4வ்யாய நம:
ஸ்வத: நின்னிந்த3லே ப்ரவர்த்தித ப்ரேரிதவாகி3ஹ
ரத2வுள்ள ‘ஸ்வபா4வ்ய’ நமோ எம்பெ3 நினகெ3
இதர ப்ரேரகரு நினகி3ல்ல நித்ய ஸ்வேச்சவான்
ஸ்வதந்த்ர ஸ்வஸ்வாமிபா4வ ஸ்வாபாவி4க நின்னல்லி
உன்னாலேயே தீர்மானம் செய்யப்பட்டு, செலுத்தப்படும் ரதத்தைக் கொண்டவனே (அப்ராக்ருத சரீரத்தை கொண்டவனே), ஸ்வபாவ்யனே, உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னை செலுத்துபவர்கள் வேறு யாரும் இல்லை. தோஷங்கள் அற்றவனே. ஸ்வதந்த்ரனே. ஸ்பாவிகமாகவே, நீயே அனைவருக்கும் ஸ்வாமியாக இருக்கிறாய்.
***
No comments:
Post a Comment