ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
540. ஸ்ரீ த்ரிவிக்ரமாய நம:
த்ரிலோகத3லி ஶூர த்ரிவிக்ரம நமோ நினகெ3
த்ரிலோக பாத3விக்ஷேப ப்ரக்2யாத ‘த்ரிவிக்ரமனு’
த்ரிலோகதி3 க3ருட3னிந்த3 பாத3விக்ஷேப கர்த
கால கு3ணதே3ஶ ஸுர நராஸுராதி3 ஸர்வேஶ
மூன்று
உலகங்களிலும் வலிமையானவனே. த்ரிவிக்ரமனே உனக்கு என் நமஸ்காரங்கள். மூன்று உலகங்களிலும்
உன் பாதம் வைத்து அளந்து புகழ் பெற்றவனே, த்ரிவிக்ரமனே. மூன்று உலகங்களிலும் கருடன்
மேல் அமர்ந்து செல்பவனே. கால, குண, தேசங்கள் அனைத்திலும், நரர்கள், தேவர்கள் என அனைவராலும்
வணங்கப்படுபவனே. சர்வேஸ்வரனே.
541. ஸ்ரீ மஹர்ஷயே நம:
மஹாஞானி நீ ‘மஹர்ஷி’ நமோ நினகெ3 ஸர்வக்ஞ
மஹான் ரிஷி ஞானி மஹர்ஷியு நீனே அவதார
தே3வஹூதிஸுவ கபில நாமதி3 ப்ரகடிஸி
மஹாஞான தத்வ போ4தி3ஸிதி3 மஹர்ஷி கபில
மஹாஞானியே.
மஹர்ஷியே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வக்ஞனே. நீயே, மகான், ரிஷி, ஞானி, மஹரிஷி. தேவஹூதியிடம்
கபில நாமகனாக அவதரித்து, மஹாஞானங்கள் கொடுக்கத்தக்க தத்வங்களை போதித்தாய். கபில மகரிஷியே.
542. ஸ்ரீ கபிலாசார்யாய நம:
ஸுக2மயனு ஸுக2 ப்ராபகனு ஆசரணீய
ஸத்கர்ம ப4க்திபூர்வக மாள்ப ஶிஷ்யர மெச்சி
ஸ்வீகரிஸி ஶிஷ்யர ஸேவெ அனுக்3ரஹ மாடு3வ
‘கபிலாசார்ய’ நமோ அஜ ஶிவர லாலிஸுதி
ஸுகமயனே.
ஸுகத்தை அருள்பவனே. செய்யவேண்டிய ஸத்கர்மங்களை பக்தியுடன் செய்யும் சிஷ்யர்களை மெச்சி,
அந்த ஸ்தோத்திரங்களை / கர்மங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு அருள்பவனே. கபிலாசார்யனே.
உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்ம ருத்ரர்களுக்கும் அருள்பவனே.
***
No comments:
Post a Comment