ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
546. ஸ்ரீ த்ரித3ஶாத்யக்ஷாய நம:
யாகா3தி4காரிக3ள ஸ்வாமி ‘த்ரித3ஶாத்யக்ஷ’ நமோ
ஸ்வர்க்க3 ஸ்தி2தி லயாத்3யத்4யக்ஷ ஸர்வத3ஶா ஸ்வாமியு
ஜாக்3ரதாதி3 த்ரையவஸ்தா2த்4யக்ஷ ப்ராபக மாத்4யமூர்த்னே
ஹீகெ3 த்ரித3ஷாயுரத்3யக்ஷ தே3வதெக3ளத்3யக்ஷ
யாகம் செய்யும் அதிகாரிகளின் ஸ்வாமியே. த்ரிதஸாத்யக்ஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வர்க்க, ஸ்திதி, லய ஆகிய அனைத்திற்கும் தலைவனே. எப்போதும் அனைவருக்கும் தலைவனே. ஜாக்ரத, ஸ்வப்ன, நித்ரா என்னும் மூன்று நிலைகளுக்கும் தலைவனே. தேவதைகளின் தலைவனே.
547. ஸ்ரீ மஹாஶ்ருங்கா3ய நம:
மஹாப்ராதா4ன்யவந்த ‘மஹாஶ்ருங்க3னே’ நமோ எம்பெ3
மஹாஞானாதி3 கல்யாண கு3ணோரு ப்ரதா4னரூப
மஹா அனுபம ஸௌந்த3ர்ய உன்னத நிஜ ஶக்த
மஹாஶ்ருங்க3 சித்ரூப மத்ஸ்ய ஸ்ரீபதி ஸர்வோத்தம
மிகவும் முக்கியமானவனே (ஸர்வோத்தமனே), மஹாஸ்ருங்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். மஹாஞானம், கல்யாண குணங்களைக் கொண்ட முக்கியமான ரூபத்தைக் கொண்டவனே. மிகச்சிறந்த ரூபத்தை கொண்டவனே. சித்ரூபனே. மத்ஸ்யனே. ஸ்ரீபதியே. ஸர்வோத்தமனே.
548. ஸ்ரீ க்ருதாந்தக்ருதே நம:
ஸித்தா4ந்த நிர்ணயவந்தனு ‘க்ருதாந்தக்ருத்’ நமஸ்தே
ஸித்தா4ந்த நிர்ணய ப்3ரம்மஸூத்ரக்ருத் வேத3வ்யாஸ
ஸாது4 விருத்3த4 கர்மதி3ம் ப3ந்தி4ஸுவனு
தை3த்ய து3ஷ்கர்மிக3ள ந்ருஸிம்ஹ ப4க்தபாலா
ஸித்தாந்தத்தை நிர்ணயம் செய்தவனே. க்ருதாந்தக்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸித்தாந்தத்தை நிர்ணயம் செய்யத்தக்க பிரம்மஸூத்ரத்தினை இயற்றிய வேதவ்யாஸரே. உன் பக்தர்களை கர்ம பந்தனத்தினால் கட்டுபவனே. தைத்ய, துஷ்டர்களுக்கு நரசிம்மமாக வந்து அழிப்பவனே. பக்தர்களை காப்பவனே.
***
No comments:
Post a Comment