ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
567. ஸ்ரீ வ்ருக்ஷாய நம:
ப4க்தர ஆபத்து பரிஹரிஸுவி ‘வ்ருக்ஷ’ நமோ
‘வ்ரு’ எந்த3ரெ பாபஜன்ய ரோக3 பீடா3 ஆபத்துக3ள்
‘க்ஷ’ எந்த3ரெ ஆகஷ்டக3ள நாஶமாடு3வந்தா2த்3து3
ப4க்தாபீ3ஷ்டப்ரத3 ஸர்வோத்தம கல்பவ்ருக்ஷ ஸ்ரீஶ
பக்தர்களின் ஆபத்துகளை பரிகரிப்பவனே. வ்ருக்ஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ‘வ்ரு’ என்றால் பாவத்திற்கு காரணமான நோய் / பீடைகள்; ‘க்ஷ’ என்றால் அந்த கஷ்டங்களை அழிக்கத்தக்கவன் என்று பொருள். பக்தர்களின் அபீஷ்டங்களை நிறைவேற்றுபவனே. ஸர்வோத்தமனே. கல்பவ்ருக்ஷனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.
568. ஸ்ரீ புஷ்கராக்ஷாய நம:
பூர்ண நீ வ்யாப்தனோ ’புஷ்கராக்ஷ’ நமோ நமோ எம்பெ3
பூர்ணத்வதி3ம் தே3ஶகால வஸ்து ஸர்வத்ர நீ வ்யாப்த
பூர்ணத்வதி3ம் புஷ்ட துஷ்ட போஷக வனஜேக்ஷண
பூர்ணகாம நீ ஸர்வப்ரகாரதி3 ஸ்வதந்த்ரதி3 பூர்ண
பூர்ணனே. நீ அனைத்து இடங்களிலும் வ்யாப்தன். புஷ்கராக்ஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தேச, கால, வஸ்துக்களில், அனைத்து காலங்களிலும், நீ பூர்ணனாகவே இருக்கிறாய். பக்தர்களை காப்பவனே. பூர்ணகாமனே. நீ அனைத்து விதங்களிலும், ஸ்வதந்த்ரன் மற்றும் பூர்ணன்.
569. ஸ்ரீ மஹாமனஸே நம:
மஹாதொ3ட்ட உதா3ர மன ‘மஹாமனஸே’ நமோ
மஹா உத்க்ருஷ்டதம ஞானவந்த மஹானுபா4வ
மஹான் லக்ஷ்மிதே3விய வக்ஷத3லி த4ரிஸிருவி
மஹான் பி3ரம்மவாயுக3ளிம் ஸதா3த்4யேய கருணி
மிகப்பெரிய கருணை உள்ளம் கொண்டவனே. மஹாமனஸே. உனக்கு என் நமஸ்காரங்கள். மிகச்சிறந்த ஞானத்தைக் கொண்டவனே. மஹானுபாவனே. ஸ்ரீலட்சுமிதேவியை உன் வக்ஷஸ்தளத்தில் தரித்திருக்கிறாய். பிரம்ம, வாயுகளைவிட உத்தமனே. அனைவராலும் வணங்கப்படுபவனே. கருணை கொண்டவனே.
***
No comments:
Post a Comment