Sunday, June 18, 2023

#188 - 552-553-554 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

552. ஸ்ரீ கனகாங்க3தி3னே நம:

வேக3வந்த ஶத்ருக3ளன்ன சேதன மாள்ப வஜ்ரவ

கையல்லி 4ரிஸிருவகனகாங்க3தீ3நமோ

அகளங்க சாமீகரமய அங்க33வான் நீனு

ப்ரகாஶிப ஸர்வாப4ரண ஸௌந்த3ர்யஸார ஸ்வதேஜ 

எதிரிகளை வேகமாக அழிப்பவனே, கையில் வஜ்ரத்தை (ஆயுதத்தை) தரித்திருப்பவனே. கனகாங்கதினே, உனக்கு என் நமஸ்காரங்கள். தோஷங்கள் அற்றவனே. தங்கமயமான அங்கத்தைக் கொண்டவனே. ஒளிர்வதான, ஸர்வாபரணங்களைக் கொண்ட, தேகத்தை கொண்டவனே. 

553. ஸ்ரீ கு3ஹ்யாய நம:

ஆச்சாத3னீயகு3ஹ்யநமோ அயோக்3யரிக33ம்ய

நீசதம த்ரிபுராஸுர ஜினாதி33ளிகெ3 நீ

ஆச்சாத3 போ43வித்தெ நின்ன மரெமாடி3தி3

நீசரிகெ3 கு3ஹ்யனாகி3 ஸுரர ஷங்கெ களெதி3 

ஏற்றுக் கொள்ளத்தக்க குஹ்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். அயோக்யர்களுக்கு கிடைக்காதவனே. நீசர்களான த்ரிபுராசுரர்கள், ஜினாதிகளுக்கு நீ தெரியாதவாறு உன்னை மறைத்துக் கொண்டாய். நீசர்களுக்கு தெரியாதவாறு இருந்து, தேவதைகளுக்கு அவர்களின் சந்தேகங்களை போக்கினாய். 

554. ஸ்ரீ 3பீ4ராய நம:

அபி4லாஷ ரஸவந்த3பீ4நமோ நமஸ்தே

ஆப்தகாம ஸ்வரமண ஸ்வேச்சா நீ ரமா ஸமேத

3ம்பீ4 ஸுகு3ணாப்3தி4 ஞானாதி3 தீ3ப்திவான் 43வான்

விபாரூட ஸமக்3ரைஶ்வர்ய பூர்ண ஸீதாயுக்ராம 

அனைத்து இஷ்டார்த்தங்களையும் போக்குபவனே. கபீரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களுக்கு ப்ரியனே. ஸ்வரமணனே. உன் இஷ்டப்படியே நீ ஸ்ரீலட்சுமிதேவியுடன் இருக்கிறாய். கம்பீரனே. ஸுகுணாப்தி, ஞானாதிகளைக் கொண்டவனே. பகவானே. கருடாரூடனே. அனைத்து செல்வங்களையும் கொண்டனே. ஸீதையுடன் இருப்பவனான ஸ்ரீராமனே. 

***


No comments:

Post a Comment