Tuesday, June 13, 2023

#183 - 537-538-539 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

537. ஸ்ரீ நந்த3னாய நம:

ஸுக2 ஒத3கி3ஸுவி நீனுநந்த3நமோ எம்பெ3

லோக ப்ராணிக3ளிகெ3 ஸுக2 முக்தரிகு3னு ஸ்வஸ்வ

யோக்3 ஸ்வரூபானந்த3 அனுப4 ப்ராபகனு

முக்தாமுக்தரிகெ3 ஸுகா2தி33ளு நின்ன அதீ4 

அனைவருக்கும் சுகத்தைக் கொடுப்பவனே. நந்தனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உலக பிராணிகளுக்கு சுகத்தையும், முக்தர்களுக்கு அவரவர்களின் யோக்யதைக்கேற்ப ஸ்வரூபானந்த அனுபவத்தை அளிப்பவன் நீயே. முக்தர், அமுக்தர்கள் என அனைவரின் சுகாதிகளும் உன்னுடைய அதீனத்திலேயே இருக்கின்றன. 

538. ஸ்ரீ நந்தா3 நம:

ஸ்தோத்ரதி3ந்த3 ஆனந்த3 ப்ரகடிஸுவிநந்த3நமோ

4க்தக்ருத ஶ்ருதி ஸ்ம்ருதி ஸாது4யுக்தி அவிருத்34

ஆதா4ரயுக் ஸ்துதிமெச்சி அனுக்3ரஹிஸுவி நந்த3

ஸதா3 பூர்ணகாம ஸம்ருத்34 ஆனந்தா3தி3 ஸ்வரூப 

உனக்கு செய்யப்படும் ஸ்தோத்திரங்களால் நீ மகிழ்கிறாய். நந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் சொல்லும் ஸ்தோத்திரங்களில் உள்ள ஸ்ருதி, ஸ்ம்ருதிகளின் ஆதாரங்களை நீ மெச்சி, அவர்களுக்கு அருள்கிறாய். எப்போதும் பூர்ணகாமனாக இருக்கிறாய். ஏராளமான ஆனந்தாதி ஸ்வரூபத்தைக் கொண்டிருக்கிறாய். 

539. ஸ்ரீ ஸத்யத4ர்மாய நம:

ஶ்ரேஷ்டதம அனேகாவதாரஸத்யத4ர்மநமோ

உத்க்ருஷ்ட ஸத்யம் ஞானம் அனந்தம் பி3ரம்ம நீனு ஸத்ய

ஜக3த்ரக்ஷதா4ரகனு 4ர்ம ஹீகெ3 ஸத்யத4ர்ம

கஷ்ட நீகி3ஸி ஸத்த4ர்மத3லி இட்டு பாலிஸுவி 

ஸர்வோத்தமனே. அனேக அவதாரங்களை எடுத்தவனே. ஸத்யதர்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். சிறந்ததான ஸத்ய, ஞான, அனந்த பிரம்மன் நீயே. ஸத்யமான இந்த உலகினை காப்பவன், ஆதாரகன் நீயே. இதுவே தர்மம் என்று நீ நிர்ணயம் செய்கிறாய். உன் பக்தர்களின் கஷ்டங்களை போக்கி, ஸத்யதர்மங்களை அவர்களில் வைத்து காக்கிறாய். 

***


No comments:

Post a Comment