Wednesday, June 28, 2023

#195 - 573-574-575 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***   

573. ஸ்ரீ வனமாலினே நம:

கீர்த்தனீய 4ஜனீய கர்ம ஸ்ரேணி ஸ்ரேணியாகி3

கர்தனாகி3 இருவிவனமாலிநமோ நினகெ3

4க்தரிம் ஶ்ரோதவ்ய மந்தவ்ய நிதி4 த்3யாஸிதவ்ய நீ

பத்மமாலா ஆபது3த்3தா4ரியே ஸ்ரீயிந்த3 ஸம்ஸேவ்ய 

கீர்த்தனை / பஜனை செய்யத்தக்கவனே. தொடர்ச்சியாக கர்மங்களை செய்விக்கும் கர்தனாக இருக்கிறாய். வனமாலினே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் மூலமாக, ஸ்ரவண, மனன, நிதித்யாஸன ஆகியவற்றை செய்து கொள்பவனே. பத்ம மாலா தரித்தவனே. ஆபத்துகளை பரிகரிப்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியால் வணங்கப்படுபவனே. 

574. ஸ்ரீ ஹலாயுதா4 நம:

4க்தரிகெ3 அபீ3ஷ்டயோஜகஹலாயுத4நமோ

ஶுக்லகேஶ அவதார ஹலாயுத4 4ரனாத3

ஸங்கர்ஷண 3லராமனலி ஸதா3 ஆவிஷ்டனு

4க்திஹிம்ஸக து3ஷ்டர நிராஸக ஆயுத4வான் 

பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனே. ஹலாயுதனே உனக்கு என் நமஸ்காரங்கள். சுக்லகேஷ அவதாரனே. ஏர் பிடித்தவனே. ஸங்கர்ஷணனே. பலராமனே. பக்தர்களை துன்புறுத்தும் துஷ்டர்களை அழிப்பவனே. ஆயுதங்களை ஏந்தியவனே. 

575. ஸ்ரீ ஆதி3த்யாய நம:

3ஹுபோ4க்தானிஆதி3த்யாநமோ அத்தா சராசர

க்3ருஹணாத் மத்து நீ பு4ஜிஸெ ஸர்வரிகு3 த்ருப்தி

ப்3ருஹதீ ஸஹஸ்ர நீ ஜப்த்ரு ஶுகன ப்3ருஹதீ அன்ன

க்3ரஹிஸி க்3ருஹ 3ஹிரஸ்த2 ஜனர த்ருப்திஸிதி3 

அனைத்தையும் ஏற்றுக் கொள்பவனே. ஆதித்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சராசரங்கள் அனைத்தையும் நீ உண்கிறாய். இதனால் அனைவருக்கும் திருப்தி ஆகிறது. ப்ருஹதி ஸஹஸ்ரத்தினால் நீ வணங்கப்படுகிறாய். ஸுகனின் அன்னத்தை ஏற்றுக் கொண்டு, அனைவரையும் திருப்திப்படுத்தினாய்.

***



No comments:

Post a Comment