ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
549. ஸ்ரீ மஹாவராஹாய நம:
உத்க்ருஷ்ட மஹாத்ம்யவந்தனு நீனு விஷத3தி3
ஸ்துதிஸுவர மனஸு ஸ்தோத்ர விஷயார்த்த2 திளி
த3ந்த2 ‘மஹாவராஹ’ நமோ கோல சின்மயவபு
ஆதி3தை3த்ய அதி நீசன்ன தரித3 த4ரோத்3த4ர
மிகச்சிறந்த சரித்திரங்களைக் கொண்டவன் நீயே. தூய்மையான மனதுடன், உன்னை ஸ்தோத்திரம் செய்பவர்களின் மனதினை, அந்த ஸ்தோத்திரங்களின் விஷயர்த்தங்களின் பக்கம் இழுத்து வருபவனான மஹாவராகனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அற்புதமான சின்மய ரூபனே. ஆதிதைத்யர்களை, அதி நீசர்களை, கொன்றவனே. உலகத்தை தாங்கிப் பிடித்தவனே.
550. ஸ்ரீ கோ3விந்தா3ய நம:
ப4க்தக்ருத ஸ்தோத்ர மனவிட்டு கேளி ஸ்வீகரிஸி
ப்ரீதனாகு3வ ‘கோ3விந்த3’ நமோ நமோ வேத3 வேத்3ய
வேத3வன்னு வேதா3ர்த்த2க3ளன்ன பூர்ணதிளித3வ
வேத3வ்யாஸ நீ திளித3ஷ்டு பி3ரம்ம ருத்3ரரரியரு
பக்தர்கள் சொல்லும் ஸ்தோத்திரங்களை மகிழ்ந்து கேட்டு ஏற்றுக் கொள்பவனே, கோவிந்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். வேதங்களால் போற்றப்படுபவனே. வேதத்தினை வேதார்த்தங்களை முழுமையாக அறிந்தவனே. வேதவ்யாஸனே. நீ அறிந்த அளவிற்கு, பிரம்ம ருத்ரகளும் கூட அறிய மாட்டார்கள்.
551. ஸ்ரீ ஸுஷேணாய நம:
தன்னல்லி ப4க்தரன்னு ஸம்ஸ்தா2பிப ‘ஸுஷேண’ நமோ
நின்ன ப4க்தரிகெ3 நீ ஸர்வஸுக2 க்ஷேம ப்ராப்தி
ஸ்தா2னனாகி3ருவி ஸுகா2தி3 தா3ன ஶீல ஶோப4ன
வன்னீவி பூர்ணமஹைஶ்வர்ய ஆனந்த3மய ஸ்ரீஶ
தன் பால் பக்தர்களை இழுப்பவனே ஸுஷேணனே, உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களுக்கு நீ அனைத்து வித சுகங்களையும், நலன்களையும் அருள்கிறாய். சுகாதி அனைத்து மங்களங்களையும் நீ அருள்கிறாய். பூர்ண மஹைஸ்வர்யத்தை கொண்டவனே. ஆனந்தமயனே. லட்சுமிதேவியின் தலைவனே.
***
No comments:
Post a Comment