Monday, June 12, 2023

#182 - 534-535-536 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

534. ஸ்ரீ ஜிதாமித்ராய நம:

ஸூர்யவேக3 ஹிந்தெ3 மாடி3 ஜயிஸி முந்தெ3 ஹோகு3

ஹயக3ளுள்ளவஜிதாமித்ரநமோ நமோ எம்பெ3

ஹேய ப்ராக்ருத கு3ணக3ளன்னு ஶத்ருகூடவன்னு

ஜயிஸுவ நிர்தோ3 அமித பௌருஷ ந்ருஸிம்ஹ 

ஸூரியனை விட வேகமாக முன்னேறிச் செல்லும் குதிரைகளைக் கொண்ட ‘ஜிதாமித்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். கேவலமான ப்ராக்ருத குணங்களையும், எதிரிகளையும் வெல்பவனே; தோஷங்கள் அற்றவனே, அபாரமான புருஷ ரூபனே, நரஸிம்மனே. 

535. ஸ்ரீ ப்ரமோத3னாய நம:

ப்ரக்ருஷ்டானந்த3 நியமிஸுவப்ரமோத3நமோ

ப்ரக்ருஷ்டானந்த3 ஸுபூர்ணானுப4 ஸ்வரூப நீனு

ஶிரிகு3 வாயுதே3வரிகு3 ஞான ஆனந்தா3தி3யு

ப்ரவர்த்திஸுவி ப்ரக்ருஷ்டா ரமாஸஹ க்ரீடி3ஸுவி 

அபாரமான ஆனந்தத்தைக் கொடுப்பவனே, ப்ரமோதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நித்யானந்த, பூர்ணானுபவ, ஸ்வரூபன் நீயே. ஸ்ரீலட்சுமிதேவிக்கும், வாயுதேவருக்கும், ஞான ஆனந்தாதிகளை கொடுக்கிறாய். எப்போதும் ஸ்ரீலட்சுமிதேவியுடன் நீ இருக்கிறாய். 

536. ஸ்ரீ ஆனந்தா3 நம:

ருத்விஜரிம் க்ருத ஸ்தோத்ரக்கெ ஸர்வரீதியலி நீ

ஆதா4ரனாகி3ருவிஆனந்த3நமோ நமோ நினகெ3

மோத3மய ஆனந்த3 ஆனந்தி3 நீ யக்ஞ பூஜாதி3

ஸாது4கர்மஸ்துதி விஷயனு ஒப்பி முத3வீவி 

பிராமணர்கள் செய்யும் / சொல்லும் ஸ்தோத்திரங்களுக்கு அனைத்து விதங்களிலும் நீ ஆதாரனாக இருக்கிறாய் (அவர்களுக்கு அருள்கிறாய்). ஆனந்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்தமயனே. நீ, யக்ஞங்கள், பூஜைகள், ஸாதுக்கள் செய்யும் ஸ்துதிகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அருள்பவன். 

***


No comments:

Post a Comment