Thursday, June 8, 2023

#178 - 522-523-524 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

522. ஸ்ரீ ஜீவாய நம:

ப்3ருஹஸ்பதிய ஸ்தோத்ரதிம் கீர்த்திதனுஜீவநமோ

பி3ரம்மாண்ட ஒளகு3 ஹொரகு3 ஸர்வவு திளித3

மஹாஸாமர்த்2யவந்தனு சேஷ்டகனு தா4ரகனு

மஹைஶ்வர்யரூபனு ப்ராக்ருத விலக்ஷண நீனு 

ப்ருஹஸ்பதியின் ஸ்தோத்திரத்தால் வணங்கப்படுபவனே. ஜீவனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மாண்டத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அனைத்தையும் அறிந்தவனே. மகா சாமர்த்தியம் கொண்டவனே. அனைத்து செயல்களை செய்பவனே. மஹா ஐஸ்வர்ய ரூபனே. ப்ராக்ருதத்திலிருந்து வேறுபட்டனே. 

523. ஸ்ரீ வினியித்ரே நம:

4க்தரிகெ3 ஸ்வாத்மவன்னு கொடு3வவவினயிதா

ஸதா3 நமோ நமோ நினகெ3 ரக்ஷகனே ஶரணு

அதி4காரி 4க்த ஆசரிஸுவ ஸாத4கனெ விக்4

பா3ரதெ3 ரக்ஷிஸி ஸுக்ஞானாதி33ளீவி 3யதி3 

பக்தர்களுக்கு ஸ்வாத்மத்தை கொடுப்பவனே. வினயித்ரே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காப்பவனே உன்னை வணங்குகிறேன். அதிகாரியே. பக்தர்கள் அடைவதான ஸாதகனே. எவ்வித தடைகளும் வராமல், அனைத்து வித சுக ஞானங்களை அருள்பவனே. 

524. ஸ்ரீ ஸாக்ஷிணே நம:

3லவான் நீஸாக்ஷிநமோ நமோ நினகெ3 நமஸ்தே

3லானந்த3 ஞானாதி3பூர்ண நீ ஸர்வத்ர வ்யாபிஸி

ஒள ஹொர விஶ்வதோமுக2னாகி3 4க்தருக3

3லஞான வர்த்தி4ஸி காய்தி3 ஸர்வாத்4யக் ந்ருஸிம்ஹ 

வலிமையானவனே. ஸாக்‌ஷிணே உனக்கு என் நமஸ்காரங்கள். வலிமை, ஆனந்த, ஞான ஆகிய அனைத்தையும் முழுமையாகக் கொண்டவனே. நீ அனைத்து இடங்களிலும் வ்யாபித்து, உள்ளேயும் வெளியேயும் இருந்து, பக்தர்களுக்கு வலிமை, ஞானங்களை கொடுத்து காக்கிறாய். அனைவருக்கும் தலைவனே. நரசிம்மனே. 

***


No comments:

Post a Comment