Tuesday, June 6, 2023

#176 - 516-517-518 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

516. ஸ்ரீ புருஜிதே நம:

ஸூரிப்ராப்யனு ஶத்ருக3 ஜயிஸுவவ நீனு

புருஜித்நமோ நினகெ3ம்பெ3 அக்ஞான திமிரவ

பரிஹரிஸுவி ஞானி 4க்தர அரிஸம்ஹர்த

ஸரஸிஜாஸனாதி3 த்4யேய தோ3 நிர்லிப்தபூர்ண 

அறிஞர்களால் அறியப்படுபவனே. எதிரிகளை வெல்பவன் நீயே. புருஜிதே உனக்கு என் நமஸ்காரங்கள். அஞ்ஞானத்தை நீ பரிகரிக்கிறாய். ஞானி, பக்தர்களின் அரிஷட் வர்க்கங்களை நீ அழிக்கிறாய். பிரம்ம முதலான அனைத்து தேவதைகளால் நீ வணங்கப்படுகிறாய். தோஷரஹிதனே. எதற்கும் சம்பந்தப்படாமல் பூர்ணமாக இருப்பவனே. 

517. ஸ்ரீ புருஸத்தமாய நம:

அதி 3லிஷ்ட வ்ருத்ராஸுரன்ன ஸம்ஹாரகெ3ய்ஸித3

அதிஸாமர்த்2 3லாதி3பூர்ணபுருஸத்தமனே

ஸதா3 நமோ ஸ்வதந்த்ர இருவிகெ உள்ளவ நீனு

ஸத்தா ப்ரவ்ருத்யாதி33ளீவி ஸர்வத்ர ஸர்வ ஸ்வாமி 

மிகவும் வீரனான வ்ருத்ராசுரனை கொன்றவனே. அற்புத சாமர்த்தியத்தை கொண்டவனே. வலிமை முதலான குணங்களை முழுமையாகக் கொண்டவனே. புருஸத்தமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வதந்த்ரனே. அனைத்து இடங்களிலும் இருந்து, அனைவருக்கும் அனைத்தையும் கொடுப்பவனே. ஸ்வாமியே. 

518. ஸ்ரீ வினியோஜ்யாய நம:

யாரிந்த3லு ப்ரேர்யனல்ல நீவினியோஜ்யனேநமோ

பராதீ4னனல்ல பரம ஏக ஸ்வதந்த்ர

பரமேஶ்வர நீனு ஜக3ன்னியோஜன நின்னிந்த3

ஸ்ரீ ரமா பி3ரம்ம ஶிவாதி3 ஸர்வஸ்வாமி அஜித 

யாராலும் ஆணையிடப்பட முடியாதவனே. வினியோஜ்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ யாரையும் நம்பி இல்லை. ஸ்வரமணனே. ஸ்வதந்த்ரனே. உலகமே உன்னால் படைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்ரீ ரமாதேவி, பிரம்ம, ருத்ர என அனைவருக்கும் ஸ்வாமியே. அஜிதனே.


***

No comments:

Post a Comment