ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
519. ஸ்ரீ ஸத்யஸந்தா4ய நம:
சலனாதி3 ஸஞ்சார மாடு3வ கோ3கூட போஷக
ஸ்ரீ லட்சுமிபதி ‘ஸத்யஸந்த4’ நமோ எம்பெ3 நினகெ3
மாலோல ஸ்ரீ ஸத்யப்ரதிஞாவந்தனு ஸத்யஸந்த4
ப3லு ஸத்யஸங்கல்ப ஸ்ருஷ்டிகர்த ஸத்யநாமா
அனைத்து இடங்களிலும் மேய்வதான பசுக்கூட்டத்திற்கு தலைவனே.
ஸ்ரீலட்சுமிபதியே. ஸத்யஸந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமிதேவியின் தலைவனே. சொல்வதையே
செய்பவனே. ஸத்யஸந்தனே. ஸத்ய ஸங்கல்பனே. ஸ்ருஷ்டி கர்த்தனே. உண்மையான பெயர்களை கொண்டவனே.
520. ஸ்ரீ தா3ஶார்ஹாய நம:
ஸூர்யாதி3க3ளிகெ3 ப்ரகாஶதா3ன மாடு3வத3ரல்லி
ஸாமர்த்2யவுள்ளவனு ‘தா3ஶார்ஹ’ நமோ நமோ எம்பெ3
அமல ப4க்தருக3ளிகெ3 ஸுக2தா3ன மாள்ப
காமிதார்த்த2ப்ரத3 க்ருஷ்ண நமோ யாத3வ தா3ஶார்ஹ
சூரியர்கள் முதலானோர்களுக்கு ஒளியை கொடுப்பவனே. அத்தகைய
சாமர்த்தியம் கொண்டவனே. தாஶார்ஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள்.
பக்தியை வெளிப்படுத்தும் பக்தர்களுக்கு மோட்சத்தை அருள்பவனே. அவர்களின் இஷ்டார்த்தங்களை
அருள்பவனே. கிருஷ்ணனே. தாஸார்ஹனே.
521. ஸ்ரீ ஸாத்வதாம்பதயே நம:
ப3லவான் அதி4பதி நீனு ‘ஸாத்வதாம்பதி’ நமோ
பாலிஸுவி ஸாத்வவந்த ப4க்தஜனருக3ளன்ன
மாலக்ஷ்மீபதி நீனு ஸாத்வதாம் பாஞ்சராத்ரதி3
ஹேளிருவி இந்தி3ராதி3 நவமூர்த்திகா3தி3மூர்த்தி
வலிமையானவனே. தலைவனே. ஸாத்வதாம்பதியே. பக்தர்களை நீ
காக்கிறாய். லட்சுமிபதியே. பாஞ்சராத்ரங்கள் உன்னையே புகழ்கின்றன. இந்திராதி அனைத்து
தேவதைகளுக்கும் நீயே தலைவன்.
***
No comments:
Post a Comment