ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
543. ஸ்ரீ க்ருதக்ஞாய நம:
ஆஹ்வான ஶ்ரவண மாள்ப ‘க்ருதக்ஞனே’ நமோ எம்பெ3
ஸ்ரீஹரி ப்ரீத்யர்த்த மாள்ப பூஜெயலு யக்3ஞத3லு
ஆஹ்வான ஸ்தோத்ர ஸூக்த கிவிகொ3ட்டு ஆலிஸி அனு
க்3ரஹ மாடு3வி ப4க்தக்ருத ஸ்துதிக3ளன்ன மெச்சி
அனைவரும்
செய்யும் ஸ்தோத்திரங்களை கேட்கும் ‘க்ருதக்ஞனே’ உனக்கு
என் நமஸ்காரங்கள். ஸ்ரீஹரியின் ப்ரீத்யர்த்தமாக செய்யப்படும் பூஜையிலும், யக்ஞத்திலும்
இருந்து, அந்த ஸ்தோத்திர, ஸூக்தங்களை காது கொடுத்து கேட்டு, அந்த பக்தர்கள் செய்யும்
ஸ்துதிகளுக்கு மகிழ்ந்து, அவர்களுக்கு அருள்கிறாய்.
544. ஸ்ரீ மேதி3னி பதயே நம:
ப4க்தவாஞ்சித வர்ஷண ஶீல மனஸ்ஸுள்ளவனு
‘மேதி3னிபதி’ நமோ நினகெ3 ராஜராஜேஶ்வர
க்ஷிதீஶாந்தர்க3தனாகி3 ஜனர போஷிஸி மத்து
மேதி3னீஶ ஸ்வயம் ராம நீ ப4க்தேஷ்ட வர்ஷிஸிதி3
பக்தர்ளுக்கு
அருளும் அபாரமான, இளகிய, மனம் கொண்டவனே. மேதினிபதியே உனக்கு என் நமஸ்காரங்கள். ராஜராஜேஸ்வரர்கள்,
அரசர்கள் என இவர்களில் அந்தர்கதனாக இருந்து, மக்களை காத்து, மேலும், உலக நாயகனாக விளங்குபவனே.
ஸ்ரீராமனே. நீ பக்தர்களின் இஷ்டார்த்தங்களை முழுமையாக நிறைவேற்றுகிறாய்.
545. ஸ்ரீ த்ரிபதா3ய நம:
அஶ்வரத2கப இந்த2 சின்ஹ ‘த்ரிபத3னே’ நமோ
ஸஸதி கஶ்யபர ஸபத்யும தே3ஹி ஜீவர
ஈஶ ப்ராணனு த்ரிபத3 கா3யத்ரி ப்ரதிபாத்3யனு
த்ரிஸ்தா2ன த்ரிபாத்3 வைகுண்ட ஶ்வேத த்3வீபானந்தாஸன
குதிரைகளுடனான
ரதத்தை சின்னமாக கொண்டவனே. த்ரிபதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஜீவர்களின் தலைவனே. ப்ராணனே.
மூன்று பாதங்களைக் கொண்ட காயத்ரி ப்ரதிபாத்யனே. வைகுண்ட ஸ்வேதத்வீப அனந்தாஸன என்னும்
மூன்று இடங்களில் வசிப்பவனே.
***
No comments:
Post a Comment