ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
513. ஸ்ரீ ஸோமபாய நம:
முக்2யவாயு தே3வதெக3ள் மனுக3ளு மனுஷ்யரு
அரியத3 மஹாத்ம்யவந்த ‘ஸோமப’ நமோ எம்பெ3
நீ யக்3ஞத3லி ஸோமரஸவன்ன பானமாடு3வி
உமாயுக் ருத்3ரன்ன பரிபாலிஸுதி ஸ்வாமி நீனு
முக்யபிராணர், தேவதைகள், மனுகள், மனிதர்கள் என யாருமே
முழுமையாக அறியப்பட முடியாத மகிமைகளை கொண்டவனே. ஸோமபனே உனக்கு என் நமஸ்காரங்கள். செய்யப்படும்
யக்ஞங்களில் அதன் ரஸத்தினை நீ ஏற்றுக் கொள்கிறாய். உமாதேவி, ருத்ரர் ஆகியோரை காத்தாயே
ஸ்வாமி.
514. ஸ்ரீ அம்ருதபாய நம:
ஸ்தோத்ரக3ள ஶ்ரவணமாடு3வி ‘அம்ருதப’ நமோ
ப4க்திபூர்வக ஸ்துதி அம்ருதவாக்யக3ள மெச்சி
ஹிததி3 நீ கிவிகொ3ட்டு ஆலிஸி ஸ்வீகரிஸி
ப4க்தக்ருத ஸ்தோத்ர படன ஶ்ரவண ப2லவீவி
நாம் செய்யும் ஸ்தோத்திரங்களை கேட்பவனே. அம்ருதபனே
உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தியுடன் செய்வதான ஸ்ருதி வாக்கியங்களை மெச்சி, கருணையுடன்
நீ அதனை கேட்டு, ஏற்றுக் கொண்டு, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப பலன்களை கொடுப்பாய்.
515. ஸ்ரீ ஸோமாய நம:
ரமா ஸமேத ஹரி ப்ரதிபாதி3தனாகி3ருவ
ஆம்னாய வாக் ஸஹவர்த்தமான ‘ஸோம’ நமோ எம்பெ3
ஸுமனோஹர ஸௌந்த3ர்யஸார ஹிதகர ரூப
அமல உத்க்ருஷ்டானந்தா3னுப4வனே ஸ்ரீஶ
ரமா சமேதனாக அனைவரிலும் ப்ரதிபாதிதனாக இருக்கும் ஸ்ரீஹரியே.
ஸோமனே உனக்கு என் நமஸ்காரங்கள். மனோஹரனே. மகிழ்ச்சியை கொடுப்பதான ரூபத்தை கொண்டவனே.
எல்லையில்லா ஆனந்த அனுபவத்தை கொண்டவனே / கொடுப்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.
***
No comments:
Post a Comment