Tuesday, June 20, 2023

#190 - 558-559-560 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

558. ஸ்ரீ வேத4ஸே நம:

4க்தர மனெகெ3 ஆக3மன மாள்பவேதா4நமோ

விது3ரன மனெகெ3 ஆக3மனமாடி3 பூஜாதி3

4க்தியுக் ஸேவெ ஸ்வீகரிஸிதி3 குலால பீ4மன

ஸத3னக்கெ ஆக3மிஸி நித்ய ஸுக2ஞானவித்தி 

பக்தர்களின் வீட்டிற்கு (மனதிற்கு) வருபவனே. வேதஸே உனக்கு என் நமஸ்காரங்கள். விதுரனின் வீட்டிற்கு வந்து, பூஜாதி பக்திகளை ஏற்றுக் கொண்டாய். குலால பீமனின் வீட்டிற்கு வந்து, அவனுக்கு ஞானத்தை அளித்து, முக்தியையும் கொடுத்தாய். 

559. ஸ்ரீ ஸ்வாங்கா3 நம:

கீர்த்தி என்னுவ 4 ஸ்வத: உள்ளவஸ்வாங்க3நமோ

வேதே3ராமாயணேசைவ புராணே பா4ரதே ததா2

ஆதா3வந்தேச மத்4யேச விஷ்ணு ஸர்வத்ர கீ3யதே

ஸ்வதந்த்ர அங்க3 அங்கா3ங்ய sபி4ன்னனாத3 உருகா3 

புகழ் என்பதான செல்வத்தை தானே கொண்டவனே. ஸ்வாங்காயனே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதங்களில், ராமாயணத்தில், புராணங்களில், பாரதத்தில்கூட, துவக்கத்தில், இறுதியில், நடுவில் என அனைத்து இடங்களிலும் விஷ்ணுவே புகழப்படுகிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. ஸ்வதந்த்ரனே. அங்க அங்காங்களில் வேறுபாடு அற்றவனே. சிறந்த அப்ராக்ருத தேகத்தை கொண்டவனே. 

560. ஸ்ரீ அஜிதாய நம:

அபராஜித நீனுஅஜிதநமோ நமோ எம்பெ3

அபே4த்ய அச்சேத்ய அவ்யய ஶோக அனிர்விண்ண

ஸுப3லி நீ ஆதி3தை3த்யாதி3 மஹாஶத்ரு ஸம்ஹார

அப்3தி4யலி ஆவிர்ப்ப4விஸித3 இந்தி3ராபதியு

யாராலும் வெல்லப்பட முடியாதவனே. அஜிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். வெல்லப்பட முடியாதவன். காயப்படுத்தப்பட முடியாதவன். அழிவு இல்லாதவனே. சோகம் இல்லாதவனே. துக்கம் இல்லாதவனே. ஆதி தைத்ய முதலான தைத்யர்களை கொன்றவனே. பாற்கடலில் தோன்றியவளான ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவன் நீயே. 

***

No comments:

Post a Comment