ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
582. ஸ்ரீ த்3ரவிணப்ரதா3ய நம:
ஸுவர்ண கொடு3வவ நீனு ‘த்3ரவிணப்ரத3’ நமோ
ஸுவர்ணோப லக்ஷித ஸர்வத்3ரவ்ய த4னாதி3க3ள
பு4வி தே3வருக3ளிகெ3 வேத3 வேத3 அர்த்த2க்3ஞான
ஸர்வ த்3ரவிணவன்னீவி புருஷார்த்த2ப்ரத3 ஸ்ரீஶ
தங்கத்தை (அருளை) கொடுப்பவன் நீயே. த்ரவிணப்ரதனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து வித த்ரவ்ய, செல்வங்களை அனைவருக்கும் அளிப்பவனே. வேத, வேதங்களின் அர்த்த ஞானம் ஆகியவற்றை அனைவருக்கும் புரியச்செய்பவனே. புருஷார்த்தங்களை நிறைவேற்றுபவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.
583. ஸ்ரீ தி3வ:ஸ்ப்ரதே நம:
மோத3 உத்ஸஹாதி3 ஈவி ‘விவ:ஸ்ப்ரஶ்’ நமோ நினகெ3
உத்திஷ்ட நாராயண வாஸுதே3வ வைகுண்ட நின்ன
உத்தம ஸ்வரூப பாத3த்ரய ஸம்ஸ்மரிஸுவவர
ப4க்தர ஞானிக3ள மோத3 உத்ஸாஹதி3ந்த3 காயுவி
மகிழ்ச்சி, உற்சாகம் ஆகியவற்றை அருள்பவனே. திவ:ஸ்ப்ரதனே உனக்கு என் நமஸ்காரங்கள். நாராயணனே. வாஸுதேவனே. வைகுண்டனே. உன்னுடைய உத்தம பாதங்களை நினைப்பவர்களை, பக்தர்களை, ஞானிகளை, மகிழ்ச்சி / உற்சாகங்களைக் கொடுத்து அருள்கிறாய்.
584. ஸ்ரீ ஸர்வத்3ருஶே நம:
அபி4லாஷிஸுவ ஞானகொடு3வ ‘ஸர்வத்3ருக்’ நமோ
ஶோப4ன மஹைஸ்வர்யவான் நீ ஸர்வவன்னு நீடு3த்தி
ஸ்வப4க்தரிகெ3 நின்ன ஸார்வக்ஞத்வ வ்யாபகத்வ
வைப4வ தோரிஸி ஸஞ்ஞானவீவி ஸர்வதோமுக2
விரும்புவதான ஞானத்தைக் கொடுக்கும் ஸர்வத்ருஸே உனக்கு என் நமஸ்காரங்கள். பரம மங்களங்களைக் கொடுக்கும் மஹத் ஐஸ்வர்யங்களை கொண்டவன் நீ. உன் பக்தர்களுக்கு அனைத்தையும் அருள்கிறாய். உன்னுடைய ஸர்வக்ஞத்தை, வ்யாபகத்வத்தை, அதன் சிறப்புகளை காட்டி, நல்ல ஞானத்தை அருள்கிறாய். ஸர்வதோமுகனே.
***
No comments:
Post a Comment