Sunday, July 23, 2023

#218 - 642-643-644 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

642. ஸ்ரீ பூ4ஶயாய நம:

4ரணியலி ஶ்வக3 ப்ரேரிஸுவபூ4ஶய

ஶிரபா3கி3 நமோ எம்பெ3 பாஹிமாம் ஸ்ரீ ஹ்ருஷிகே

வராஹ ஹயக்3ரீவ த்ரிவிக்ரம ராக4 கூர்ம

எரடு3 கையிந்த3 4னத்3ரவ்ய பாசி பாசி கொடு3வி 

பூமியில் குதிரைகளை ப்ரேரணை செய்பவனே. பூயனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீ ஹ்ருஷிகேனே என்னை அருள்வாயாக. வராஹனே, ஹயக்ரீவனே. த்ரிவிக்ரமனே. ராகவனே. கூர்மனே. உன்னுடைய இரு கரங்களால், தன த்ரவியங்களை நீ அனைவருக்கும் வாரி வாரி வழங்குவாய். 

643. ஸ்ரீ பூ4ஷணாய நம:

ஶ்வக3 ஹொரகி3ந்த3 திருகி3ஸுவபூ4ஷண

ஸ்ரீ நமோ நமோ எம்பெ3 ஹ்ருஷிகே ஸங்கர்ஷண

நீ ஸதா3பூர்ண ஆனந்த3 சேஷ்டவான் ஞானிகெ3

பூ4ஷண ரகு4குல யது3குல திலக நீனு 

குதிரைகளை வெளியிலிருந்து இயக்குபவனே. பூஷணனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஹ்ருஷிகேனே ஸங்கர்ஷணனே. நீ எப்போதும் பூர்ணனானந்தன். அனைத்து செயல்களை செய்விப்பவன். ஞானிகளுக்கு பூஷணமாக இருப்பவன். ரகுகுல ராமனே. யதுகுல கிருஷ்ணனே. 

644. ஸ்ரீ பூ4தயே நம:

ஸூர்யமண்ட3 ப்ராபகபூ4திநமோ நமோ எம்பெ3

ஸூர்யஸ்வனி ஸூரிப்ராப்ய க்4ருணி ஶ்வர்ய ரூபனு

ப்ரத்3யும்ன வாஸுதே3 வராஹ நாராயண நமோ

அனிருத்34 நரஸிம்ஹ ஸங்கர்ஷண அப்3தி4ஶாயி 

சூர்ய மண்டலத்தை ஒளிர்விக்கும் பூதியே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞானிகள் உன்னையே வழிபடுகின்றனர். ஐஸ்வர்ய ரூபனே. ப்ரத்யும்னனே. வாஸுதேவனே. வராகனே. நாராயணனே. அனிருத்தனே. நாரஸிம்ஹனே. ஸங்கர்ஷணனே. பாற்கடலில் படுத்திருப்பவனே. 

***


No comments:

Post a Comment