ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
651. ஸ்ரீ விஶோத4னாய நம:
த4ன ப்ராபக ‘விஶோத4னா’ நமோ ஸதா3 நினகெ3
க4னபாப பரிஹரிஸி ஆயுராரோக்3ய ஐஶ்வர்ய
வன்னீவி காயமன கலுஷ களெது3 ஶ்ரவண
மனனத்4யான ஸௌஶீல்ய ப4க்திஞான வர்த்3தி4ஸுவி
செல்வங்களை அருள்பவனே. விஶோதனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான பாவங்களை பரிகரித்து, ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்யங்களை அருள்பவனே. தேகத்தில், மனதில் உள்ள தோஷங்களை களைந்து, ஸ்ரவண, மனன, த்யான, பக்தி, ஞான ஆகியவற்றை நீ வளர்ப்பாய்.
652. ஸ்ரீ அனிருத்3தா4ய நம:
ப2லப்ராப்தி ஒத3கி3ஸுவி ஸர்வ நிரோத4கனு
ப2லி நீனு ‘அனிருத்3த4’ நமோ எம்பெ3 ஶாந்திபதே
ஶீலனு ஸம்ஸாரதி3 முக்தரதா4ரகனு மத்து
ஒள்ளேபோஷகனு எது3ரில்லத3 மஹாமஹிம
வலிமையை அருள்பவனே. அனைத்து துஷ்டர்களையும் அழிப்பவனே. அனிருத்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஷாந்தியின் பதியே. வீரனே. சம்சாரத்திலிருந்து விடுபட்ட முக்தர்களை காப்பவனே. எதிரிகள் இல்லாத மஹாமஹிமனே.
653. ஸ்ரீ அப்ரதிரதா2ய நம:
ப்ரதியோ ஸ்த்3ருஷவோ ரஹிதவாத3 ஸுலக்ஷண
வாத3 ஸுஸுக2 ‘அப்ரதிரத2’ நமோ நமோ எம்பெ3
ப்ரதிபக்ஷ இல்லத3ந்த ஸுக2சித் ப3லாதி3 பூர்ண
அத்3பு4த அனுபம மஹிம ப்ரஸன்ன ஸந்த்ராத
உன்னைப் போலவோ, ஒப்பிட்டுக் கூறவோ மற்றவர் இல்லாத சுலட்சணங்களை கொண்டவனே. அப்ரதிரதனே உனக்கு என் நமஸ்காரங்கள். எதிராளி இல்லாதவனே. ஸுக சித் பலம் ஆகியவற்றை பூரணமாக கொண்டவனே. அற்புத மிகச்சிறந்த மகிமைகளை கொண்டவனே. பக்தர்களை காப்பவனே
***
No comments:
Post a Comment