ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
618. ஸ்ரீ ஸ்ரீதா3ய நம:
ஸம்பத்து கொடு3வவனு ‘ஸ்ரீத3’ நமோ நமோ எம்பெ3
ஸம்பத்து த4ன த்3ரவ்ய ரத்னாப4ரண ஸ்வர்ணாதி3க3ள்
ஸம்பத்து ஸுக்ஞான தேஜஸ்ஸு த்4ருட3 தை4ர்யப3லவு
ஸம்பத்து ஆரோக்3ய ஆயுர்ப4க்தி ஐஶ்வர்யப்ரத3னு
செல்வத்தை அருள்பவனே. ஸ்ரீதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். செல்வம், த்ரவ்யங்கள், ரத்ன ஆபரண, தங்கம் - ஆகியவை ஸம்பத் எனப்படுகின்றன. ஞான, தேஜஸ், அபாரமான தைர்ய, வலிமை - ஆகியவை ஸம்பத் எனப்படுகின்றன. ஆரோக்ய, ஆயுள், பக்தி, ஐஸ்வர்ய ஆகிய ஸம்பத்தினை கொடுப்பவனே.
619. ஸ்ரீ ஸ்ரீஶாய நம:
பு3த்3தி4தா3தனெ ‘ஸ்ரீஶ’ ஸர்வதா3 நமோ நினகெ3
பு4த்தி3 நியாமக நீனு வந்தி3த ப்ரபுத்3த4ரிந்த3
நீ த3யதி3 ஸத்ப4க்தி பு3த்3தி4மான்க3ள்கெ3 ஸுகஞான
இத்து காய்தி3 இந்தி3ராபதி ஸ்ரீனிவாஸ ஶரணு
புத்தி அளிப்பவனே. ஸ்ரீஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். புத்தியை நியமிப்பவன் நீயே. உன்னை வணங்குபவர்களுக்கு நீ ஸத்பக்தி, புத்தி ஆகியவற்றை அருள்கிறாய். ஞானத்தை அளித்து காக்கிறாய். இந்திராபதியே. ஸ்ரீனிவாஸனே.
620. ஸ்ரீ ஸ்ரீனிவாஸாய நம:
ஷட்கு3ண ஸம்பத் வாஸஸ்தா2ன ‘ஸ்ரீனிவாஸனே’ நமோ
த்ரிகு3ண மானி ஸம்பத் ஸௌபா4க்3ய லக்ஷ்மிவாஸ நீனு
வாகீ3ஶ கௌ3ரீஶாதி3 ஸ்ரீமந்தரொளு ஜ்வலிஸுதி
அகளங்க ஞானப4க்தி ஐஶ்வர்ய ஆயுர்யஶஸ் ஈவி
ஷட்குண ஸம்பத்களின் இருப்பிடமே. ஸ்ரீனிவாஸனே. உனக்கு என் நமஸ்காரங்கள். த்ரிகுணங்களின் இருப்பிடமான, ஸம்பத், ஸௌபாக்கியங்களை அருளும் லட்சுமியின் இருப்பிடம் நீயே. பிரம்ம, ருத்ரர் முதலான அனைவரிலும் நீ இருக்கிறாய். தோஷங்கள் அற்ற, ஞான, பக்தி, செல்வம், ஆயுள், புகழ் ஆகியவற்றை அளிப்பவனே.
***
No comments:
Post a Comment