Wednesday, July 19, 2023

#215 - 633-634-635 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

633. ஸ்ரீ விஜிதாத்மனே நம:

4க்தரிகெ3 புத்ராத்3யபி4ஷ்டவீவனுவிஜிதாத்ம

ஸதா3 நமோ எம்பெ3 ஸாது4 ஶமத3 கு3ணவந்த

ஶ்ரத்3தா4ளு 4க்தர மனோரத2 பூரெயிஸுவ ஸ்வாமி

வைனதேய விப 3ருட3 ஶேஷாதி3 ஸேவிதனு 

பக்தர்களுக்கு புத்ர முதலான இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவனே. விஜிதாத்மனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸஜ்ஜனர்கள், குணவந்தர்கள், பக்தர்கள், வைராக்யம் கொண்டவர்கள், ஆகியோரின் மனோரதங்களை நிறைவேற்றுபவனே, ஸ்வாமியே. பறவைகளில் சிறந்தவனான கருடன், சேஷ ஆகியோரால் வணங்கப்படுபவனே. 

634. ஸ்ரீ விதே4யாத்மனே நம:

த்3யாவா ப்ருதி2வ்யாதி3 நியாமகவிதே4யாத்மாநமோ

யாவ யாவது3 யாரு யாரு ஹேகெ3 ஹேகெ3 இரபே3கோ3

ஸர்வ ஸோசித கர்மத4ர்ம நியாமக ஸ்வாமி நீ

விதே4யரனு ஸதா3ரக்ஷிஸி ஸுக3தி யீவி 

பூமி, ஆகாயம் ஆகிய அனைத்திற்கும் நியாமகன் நீயே. விதேயாத்மனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எது எது, யார் யார், எப்படி எப்படி, இருக்க வேண்டுமோ, அப்படியே அப்படியே இருக்கச் செய்பவன், கர்மங்களை கொடுப்பவன், ஸ்வாமி நீயே. அனைவரையும் எப்போதும் காத்து, சுகம் அளிப்பவனே. 

635. ஸ்ரீ ஸத்கீர்த்தயே நம:

நிர்து3ஷ்ட கீர்த்தியுள்ளஸத்கீர்த்திநமோ நமோ எம்பெ3

வேதே3திஹாஸ புராண பாஞ்சராத்ர மொத3லாத3

ஸதா33 நின்னன்னே முக்2யதி3 கீர்த்திஸுத்தெ பி3ரம்ம

ருத்3ராதி33ளிந்த3 கீர்த்தித ஸத்யயஶஸ் நின்னது3 

களங்கமில்லாத புகழ் கொண்ட ஸத்கீர்த்தயே உனக்கு என் நமஸ்காரங்கள். வேத இதிஹாஸ, புராண, பாஞ்சராத்ர ஆகிய ஸதாகமங்கள் அனைத்தும் உன்னையே முக்கியமாக புகழ்கின்றன. பிரம்ம ருத்ராதிகளால் வணங்கப்படுபவன் நீயே. 

***


No comments:

Post a Comment