ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
654. ஸ்ரீ ப்ரத்3யும்னாய நம:
ப்ரக்ருஷ்ட த்3யுதிமந்த ‘ப்ரத்3யும்னனே’ நமோ நினகெ3
உத்க்ருஷ்ட நின்னய யஶஸ் ஜ்வலிஸுத்தே ஜக3த்தெல்லா
ப4க்த அதி4காரிகெ3 அபரோக்ஷஞான கொடு3வி
ஸ்வகாந்தி ஜ்யோதிர்மய ஜாமத3க்3னிராம ஜயது
அற்புதமான ஒளி பொருந்தியவனே. ப்ரத்யும்னனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய அபாரமான ஒளியானது, உலகெல்லாம் ஒளிர்கிறது. உன் பக்தர்களுக்கு, யோக்யதை உள்ளவர்களுக்கு, அபரோக்ஷ ஞானத்தை அளிக்கிறாய். ஸ்வ காந்தி பொருந்தியவனே. ஜ்யோதிர்மயனே. ஜாமதக்னி ராமனே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
655. ஸ்ரீ அமித விக்ரமாய நம:
மிதி இல்லத3 ஶக்திமான் ‘அமித விக்ரம’ நமோ
முத3தி3 த்ரைலோக்ய ஸமஸ்த விக்ரம த்ரிவிக்ரம
த்வச்சக்திகெ3 பரிமித இல்லவு விஷ்ணோர்னுகம்
ஶ்ருதிப்ரதிபாத்3ய பி3ரம்மாதி3 ருஜுவர்யரிம் த்4யேய
எல்லையில்லா சக்தி கொண்டவனே. அமித விக்ரமனே உனக்கு என் நமஸ்காரங்கள். மூன்று உலகங்களிலும் வெற்றி கொண்டவனே. த்ரிவிக்ரமனே. உன்னுடைய சக்திக்கு எல்லையே இல்லை. விஷ்ணோர்னுகம் என்று சொல்லும் ஸ்ருதியினால் போற்றப்படுபவனே. பிரம்மாதி, ருஜு வர்யர்களால் போற்றப்படுபவனே.
656. ஸ்ரீ காலநேமிநிக்4னே நம:
கம்ஸ ஸம்ஹாரகனே ‘காலநேமி நிஹா’ நமஸ்தே
கம்ஸாக்2யது3ஷ்டனு கால நேமி எம்ப3 அஸுரனு
அஸுர கலிகல்மஷ பரிஹார மாடு3வ நீ
கம்ஸஹந்தா ஸ்ரீகிருஷ்ண ஸாது4பாலா அமிதஶக்த
கம்ஸனை கொன்றவனே. காலநேமிக்னே உனக்கு என் நமஸ்காரங்கள். கம்ஸன் என்னும் துஷ்டன், காலநேமி என்னும் அசுரன் ஆகிய அசுரர்களை கொல்பவனே. ஸ்ரீகிருஷ்ணனே. ஸாது ஸஜ்ஜனர்களை காப்பவனே. எல்லையில்லா சக்தி கொண்டவனே.
***
No comments:
Post a Comment