Tuesday, July 18, 2023

#214 - 630-631-632 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

630. ஸ்ரீ ஶதானந்தா3 நம:

ஶதானந்த3அனந்தானந்த நமோ எம்பெ3 நினகெ3

ஶதஶப்33வு அனந்தவாசியு இல்லி நின்னய

அந்தவில்லத3 அதிஶய பூர்ணானந்த3வுக்தவு

பத்4மஜன நூரு ஆனந்த3 நின்ன ப்ரஸாத3தி3ந்த3 

ஸதானந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஷத - என்றால் அனந்த என்று இங்கு பொருள். எல்லையில்லா அபாரமான பூர்ணானந்தம் கொண்டவனே. பிரம்மனின் ஆனந்தமும் உன்னுடைய கருணையாலேயே கிடைத்தது. 

631. ஸ்ரீ நந்த3யே நம:

4க்தரிகெ3 ஆனந்த3 கொடு3வவனுநந்தி3நமோ

4க்தரிகெ3 நின்ன ப்ரஸாத3 ஹொரது பே3ரெ இல்ல

முக்தியலி 4க்தர ஸ்வஸ்வரூபானந்தா3விர்பா4

முக்தாஶ்ரயனே நின்ன ப்ரஸாத3 நியமனதி3ந்த3 

பக்தர்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவனே. நந்தியே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களுக்கு உன்னுடைய பிரஸாதம் தவிர வேறு எதுவும் இல்லை. முக்தியில் பக்தர்களின் ஸ்வஸ்வரூபானந்தத்தில் நிலைத்திருப்பவனே. இவை அனைத்தும் உன்னுடைய பிரஸாதத்தினாலேயே கிடைக்கின்றன. 

632. ஸ்ரீ ஜ்யோதிர் 3ணேஶ்வராய நம:

ஜ்யோதிர்க3ணகெ ஸ்வாமிஜ்யோதிக3ணேஶ்வரனேநமோ

ஜ்யோதிஸூர்யன ப்ரகாஶக்கெ நியாமகாஶ்ரயனு

ஜ்யோதிர்க3 ஸர்வக்கு ப்ரகா நின்ன தெஶெயிந்த3

ஜ்யோதிர்க3 ஸ்வாமித்வவு அன்யரு யாரது அல்ல 

ஜ்யோதிர் கணத்திற்கு ஸ்வாமியே, ஜ்யோதிர்கணேஸ்வரனே, உனக்கு என் நமஸ்காரங்கள். ஒளி பொருந்திய சூரியனுக்கு ஒளி கொடுப்பவனே. ஒளிமயமான அனைத்திற்கும் உன்னாலேயே ஒளி கிடைக்கிறது. அவர்களின் ஸ்வாமி நீயே தவிர, வேறு யாரும் இல்லை. 

***

No comments:

Post a Comment