Sunday, July 2, 2023

#199 - 585-586-587 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

585. ஸ்ரீ வ்யாஸாய நம:

4க்தாபீ3ஷ்டவ விஶ்தாரவாகி3 பூர்ணமாள்பவ்யாஸ

ஸதா3 நமோ ஸர்வ ஶ்ரேஷ்ட ஸர்வோத்தமானந்த3 ஞான

ஜ்யோதிர்வ்யாப்த பி3ரம்மாண்ட3 ஸர்வத்ர ஒளகெ3 ஹொரகெ3

விஶ்தாரவாகி3 ஹொளெயுவி தேஜ:புஞ்ச ஸாராத்ம 

பக்தர்களின் விருப்பங்களை முழுமையாக நிறைவேற்றுபவனே. வ்யாஸனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வ ஸ்ரேஷ்டனே. ஸர்வோத்தமமான ஆனந்த, ஞானத்தை கொண்டவனே. ஒளிமயமானவனே. பிரம்மண்டத்தில் அனைத்திலும் உள்ளே / வெளியே முழுமையாக இருந்து ஒளிர்விப்பவனே. அபாரமான தேஜஸ் கொண்டவனே. ஸாரங்களை ஏற்றுக் கொள்பவனே. 

586. ஸ்ரீ வாசஸ்பதியே நம:

யக்ஞ பூஜாதி33ளிகெ3 விராம ஸ்தானனாகி3

யக்ஞ நியாமக ஸ்வாமிவாசஸ்பதிநமோ எம்பெ3

வாங்மனஸ தே3வதெக3ளெரல்லரிகு3 பதி நீனே

காயவாங்மனஸ க்ருதவுத்பத் ப்ரீதிகரவாக3லி 

யக்ஞ பூஜைகளை ஏற்கத்தக்க இடத்தில் இருப்பவனே, யக்ஞங்களை நியமிப்பவனே, ஸ்வாமியே வாசஸ்பதியே உனக்கு என் நமஸ்காரங்கள். வாக்கு, மனஸ் ஆகியவற்றின் (தத்வாபிமானி) தேவதைகள் அனைவருக்கும் நீயே தலைவன். நம் தேகம், வாக்கு, மனஸ் ஆகியவற்றினால் செய்த செயல்கள் அனைத்தும் உனக்கும் மகிழ்ச்சியை தரட்டும். 

587. ஸ்ரீ அயோநிஜாய நம:

யோனிஸம்ப3ந்த4 ரஹிதஅயோநிஜநமோ எம்பெ3

நினகி3ல்ல 3ர்ப்ப4வாஸ ஸ்வேச்ச ப்ராது3ர்பா4 மாள்பி

யோனிவ்யதிரிக்த ஸ்தம்ப43லி ஆவிர்ப4விஸிதி3

யோனிவ்யதிரிக்த நாபி4யிம் ஹுட்டிஸிதி3 பி3ரம்மன்ன 

யோனி ஸம்பந்தம் அற்றவனே. அயோநிஜனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உனக்கு எந்த அவதார, ரூபத்திலும், எப்போதும் கர்ப்ப வாஸம் இல்லை. உன் இஷ்டத்திற்கேற்பவே நீ வெளிப்படுகிறாய். யோனியில் வராமல், கம்பத்திலிருந்து தோன்றினாய். அதேபோல, உன் நாபியிலிருந்து பிரம்மனை வெளிப்படுத்தினாய். 

***

No comments:

Post a Comment