Saturday, July 15, 2023

#212 - 624-625-626 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

624. ஸ்ரீ ஸ்ரீகராய நம:

யோக்3 ஸத்கர்மதி3ந்த3 ஞானவீவிஸ்ரீகரநமோ

யோக்3யாதி3காரிக3ளபரோக் ஞானாதி3 ஸம்பத்

3யதி3 கொடு3வியோ ஸ்ரீஹ்ரீய கைக3ளிம் ஹிடி3து3

வைனதேயாரூட4 4 த்3ரவ்யப்ரத3 ஸ்ரீ ஸ்ரீகர 

தக்க ஸத்கர்மங்களை செய்வதால், ஞானத்தை அருள்கிறாய். ஸ்ரீகரனே உனக்கு என் நமஸ்காரங்கள். யோக்யதை உள்ளவர்களுக்கு அபரோக்‌ஷ ஞானாதி செல்வங்களை கொடுக்கிறாய். ஸ்ரீலட்சுமியை அழைத்துக் கொண்டு, கருடனின் மேல் ஏறி, உன் பக்தர்களுக்கு தன, த்ரவ்யங்களை அருள்கிறாய், ஸ்ரீகரனே. 

625. ஸ்ரீ ஶ்ரேயஸே நம:

அதிஶய ப்ரஶம்ஸன யோக்3 நீனேஶ்ரேயநமோ

அதிஶய அனுபம ஆனந்த3 ஞான ஸ்வரூப

உத்தமத்வதி3 நினகெ3 ஸமரில்ல ஸ்ரீய:பதே

ஸதா33மக3ளு முக்2யதி3 நின்னன்னே ஹொக3ளுத்தெ 

மிகவும் அதிகமாக புகழ்வதற்கு நீயே யோக்யன். ஸ்ரேயனே உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான ஒப்புமை இல்லாத ஆனந்த ஞான ஸ்வரூபனே. உனக்கு யாரும் சமம் இல்லை. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. வேதங்கள் முதலானவை முக்கியமாக உன்னையே புகழ்கின்றன. 

626. ஸ்ரீ ஸ்ரீமதே நம:

பி3ரம்ம ஶிவாதி33ளிகெ3 ஆக்ஞா மாள்பாஸ்ரீமான்நமோ

பி3ரம்மகெ3ஞானம்பரம கு3ஹ்யம்எந்தே3 ஆரம்பி4ஸி (பாகவத)

மஹா ஸம்ஹித போ4தி3ஸி ஞான ப்ரகாஶவன்னித்தி

பி3ரம்ம ப்ரஜா ஸ்ருஷ்டிகெ3ய்த3 நீனித்த ஞானபோ43தி3ம் 

பிரம்ம சிவன் முதலான தேவர்களுக்கு ஆணையிடுபவரான ஸ்ரீமதே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மனின் ஞானமானது மிகவும் ரகசியமானது என்று துவங்கி, பாகவதம் என்னும் சம்ஹிதையை அனைவருக்கும் போதித்தாய். இதன் மூலம் ஞானத்தை அனைவருக்கும் அளித்தவனே. பிரம்மன் முதலான அனைவரையும் படைத்து, ஞானத்தை அளித்தவனே. 

***


No comments:

Post a Comment