ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
660. ஸ்ரீ த்ரிலோகாத்மனே நம:
விஸ்த்ருத ஞானதா3தனு ‘த்ரிலோகாத்மா’ நமோ எம்பெ3
விஸ்தாரவாகி3 நின்ன மஹிமெ ஸர்வத்ர ப்ரக்2யாத
அதி4காரி ஸர்வர்கு3 இதரர்கு3 வேத3 புராண
இத்தி யோக்ய ஸாத4னக்கெ வேத3வயாஸ த்ரிலோகஸ்வாமி
பரந்த ஞானம் கொண்டவனே. த்ரிலோகாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் அபாரமான மகிமைகள் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கிறது. அனைவருக்கும் நீயே அதிகாரி. வேத புராணங்களை ஸாதனைக்காக கொடுத்தாய். வேதவ்யாஸனே. த்ரிலோக ஸ்வாமியே.
661. ஸ்ரீ த்ரிலோகேஶாய நம:
பாபிஶத்ரு கர்மப்4ரஷ்ட ஸர்வர நிந்தி3ஸுவனு
பாபாதி3ஹர ‘த்ரிலோகேஶ’ நமோ எம்பெ3 நினகெ3
ஸ்ரீப நீ ஸர்வஶத்ரு ஸமுதா3ய கர்மப்4ரஷ்டரு
பாபிக3ளு எல்லர ஶாஸக ஸ்வாமியாகி3ருவி
பாவிகள், எதிரிகள், கர்மங்களை விட்டவர்கள் ஆகியோரை எதிர்ப்பவன். பாவங்களை அழிப்பவன். த்ரிலோகேஶனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. பாவிகள், எதிரிகள், கர்மங்களை விட்டவர்கள் ஆகியோரின் தலைவனே. அனைவரின் ஸ்வாமியே.
662. ஸ்ரீ கேஶவாய நம:
ஸுக2ஸம்பத் ஶ்ரேயஸ் ஈவ ‘கேஶவ’ நமோ நினகெ3
‘கே’ எந்த3ரெ ப்ரகாஶ பூர்ணஞான ஜ்யோதிர்மயனு
‘ஷ’ எந்த3ரெ ஆனந்தாதி3 ஸம்பன்னனு ஸதா3னந்தா3
‘வ’ எந்த3ரெ வரணீய நித்ய ஸுக2தா3த நீனு
சுக செல்வங்கள், புகழ் ஆகியற்றை கொடுக்கும் கேஶவனே உனக்கு என் நமஸ்காரங்கள். கே என்றால் - ஒளிமயமான, பூர்ண ஞானத்தைக் கொண்டவன். ஜ்யோதிர்மயன் என்று அர்த்தம். ஶ என்றால் - ஆனந்தாதி ஸம்பன்னன். ஸதானந்தன் என்று அர்த்தம். வ என்றால் - நித்ய சுகமான முக்தியை கொடுப்பவன் நீயே என்று அர்த்தம்.
***
No comments:
Post a Comment