ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
588. ஸ்ரீ த்ரிஸாம்னே நம:
ஸோம ஸ்தோத்ர மாள்ப யக்ஞக்கெ ஹோகு3வ ‘த்ரிஸாம்னே’
நமோ நினகெ3 உத்கீ3த2 ப்ரதிஹார நித4னாக்2ய
ஸாம மூரு விஷ்ணு உத்கர்ஷ மந்த்ரக3ள ஸ்துதிப்ரிய
ஸாமப்ரதிபாத்3ய நீ ஸர்வத3லி ஸம ஸர்வேஶ
உன்னை ஸ்தோத்திரம் செய்யும் யக்ஞங்களுக்கு செல்பவனே, த்ரிஸாம்னே. உனக்கு என் நமஸ்காரங்கள். உத்கீத, ப்ரதிஹார, நிதனாக்ய என்று ஸாம வேதம் உன்னை இந்த மூன்று விஷ்ணு மந்திரங்களால் புகழ்கிறது, அதனை கேட்டு மகிழ்பவனே. ஸாம வேதத்தினால் போற்றப்படுபவனே. நீ அனைவரிலும் சமமாகவே இருக்கிறாய். ஸர்வேஸ்வரனே.
589. ஸ்ரீ ஸாமகா3ய நம:
ஸ்தோத்ர அங்கீ3கார மாள்பி நீ ‘ஸாமக3’ நமோ எம்பெ3
வாக்3தேவி பா4ரதி ‘ஸா’ ப்ராணனு ‘ம’ ஈர்வகு3 ஸாம
இந்த2 பா4ரதீ வாயுக3தனாது3த3ரிம் ஹரிஸாமக3
மாத4வனே நீனு ஸாமவேத3தி3ந்த3லி க3ம்யனு
உனக்கு செய்யும் ஸ்தோத்திரங்களை நீ கேட்டு மகிழ்ந்து அருள்கிறாய். ஸாமகனே உனக்கு என் நமஸ்காரங்கள். ‘ஸா’ என்றால் வாக்தேவியான பாரதி; ‘ம’ என்றால் முக்ய பிராணர். இந்த இருவருக்குள்ளும் இருப்பவனே. இந்த பாரதி, முக்யபிராணர் இந்த இருவருக்கும் இருப்பதால், ஸ்ரீஹரி ஸாமக என்று அழைக்கப்படுகிறான். மாதவனே. நீ ஸாம வேதத்தினால் அறியப்படுகிறாய்.
590. ஸ்ரீ ஸாம்னே நம:
அபீ4ஷ்ட பூரெயிஸுவ ‘ஸாம’ நமோ நமோ நினகெ3
ஸர்வபூ4தக3ளல்லி ஸமனாகி3ருவவ நீனு
அபீ4ஷ்ட கொடு3வி பூ4தக3ளிகெ3 யதாயோக்3யதி3
ஶோப4ன ஆனந்த3 ஞான ஸ்வரூபனு ஸாம நீனு
இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவனே. ஸாமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து ஜீவர்களிலும் சமமாகவே இருப்பவனே. அவரவர்களின் யோக்யதைக்கேற்ப இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறாய். மங்களத்தைத் தருவதான ஆனந்த, ஞான ஸ்வரூபனே. நீயே ஸாமன்.
***
No comments:
Post a Comment