Wednesday, July 12, 2023

#209 - 615-616-617 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

615. ஸ்ரீ வாஸாய நம:

வேத3வாணிக3ளே ப்ரமாணவாகி3வுள்ளஸ்ரீவாஸ

வேத3வாக்யக3ளு ஸ்ரீயு வேத33ல்லி ஞேய நீனு

வேத3 வாக்யக3 முக்2யாபி4மானி ஸ்ரீதே3வியு

அந்த2 ஸ்ரீவேத3கல்பத்3ரும விஹாரி ப்ரபு4 நீனு 

வேதவாணிகளால் போற்றப்படுபவனே ஸ்ரீவாஸனே. வேதத்தில் உன் புகழையே சொல்கிறார்கள். வேத வாக்கியங்களின் முக்கிய அபிமானி ஸ்ரீதேவி. அத்தகைய வேதங்களில் இருப்பவன் தலைவன் நீயே. 

616. ஸ்ரீ ஸ்ரீபதயே நம:

தன்ன ஆஸ்ரய மாள்பர ஸம்ரக்ஷகஸ்ரீபதியு

நமோ நினகெ3 நித்ய ஸ்வயம்வர ஸ்ரீபதியே

4ராஸுத ஞானகீபதி ஸ்ரீராம பை3ஷ்மிபதி

ஸ்ரீ கிருஷ்ண நித்ய ஸ்ரீலட்சுமிபதி ஸ்ரீமன் நாராயண 

தன்னை வணங்குபவரை காப்பவனே ஸ்ரீபதியே. உனக்கு என் நமஸ்காரங்கள். நித்ய கல்யாண மூர்த்தியே. பூமியிலிருந்து பிறந்தவளான ஜானகியின் பதியான ஸ்ரீராமனே, பைஷ்மிபதியான ஸ்ரீகிருஷ்ணனே. ஸ்ரீலட்சுமிபதியே. ஸ்ரீமன் நாராயணனே. 

617. ஸ்ரீ ஸ்ரீமதாம்வராய நம:

ஜலமிஸ்ரித ஸோமதி4ம் பூஜிதஸ்ரீமதாம்வர

தலெபா3கி3 நமோ எம்பெ3 4க்தியுக் பூஜெ நைவேத்4

ஸ்ரீலட்சுமிஸேவ்ய நீனே 3யதி3 கொம்பி3 பி3ரம்மாதி3

ஶீல ஸ்ரீமந்தரிம் ஸம்வினுத ஸ்ரீ ஸர்வோத்தம 

மந்த்ராட்சதைகளால் (தண்ணீர் கலந்த அரிசி) பூஜிக்கப்படுபவனே ஸ்ரீமதாம்வரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தியுடன் பூஜை, நைவேத்தியங்களை செய்கிறேன். ஸ்ரீலட்சுமிதேவியால் வணங்கப்படுபவனே. பிரம்மாதி தேவதைகள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்கிறாய். ஸர்வோத்தமனே. 

***


No comments:

Post a Comment