ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
609. ஸ்ரீ அனிவர்த்தினே நம:
நித்ய ஸர்வத4ர்மவுள்ள ‘அனிவர்த்தீ’ நமோ எம்பெ3
ஸது3த்3ப4வஸ்தா2ன நிரோதா4தி3 லீலா த4ர்மவுள்ள
ஸத்யம் ஞானம் அனந்தம் ஆனந்த3ம் பூர்ணகு3ணப்ரியா
வந்த ஸ்வதந்த்ர ஞானேச்சா க்ரியாதி3 ஶக்தி ஸுபூர்ண
நித்யமும் ஸர்வ தர்ம உள்ள (தர்மமயமாக உள்ளவனே) அனிவர்த்தினே உனக்கு என் நமஸ்காரங்கள். தோற்றம், அழிவு ஆகியவற்றை தன் லீலைகளாக செய்பவனே, ஸத்ய, ஞான, அனந்த, ஆனந்த ஆகியவற்றை பூர்ணமாக கொண்டவனே. ஸ்வதந்த்ரனே. ஞான, இச்சா, க்ரியாதி சக்திகளை முழுமையாகக் கொண்டவனே.
610. ஸ்ரீ நிவ்ருத்தாத்மனே நம:
ப4க்தரிகெ3 த4னதா3த ‘நிவ்ருதாத்ம’ நமோ எம்பெ3
முத3 நிர்லிப்த ப4க்தரிகெ3 மோக்ஷஸாத4ன நிஷ்காம
விஹித கர்மாசரணெ பூஜா நைவேத்3ய உபயோகி3
வித்த ஞானாதி3 த4னகொடு3வ ஸ்வாமி நிவ்ருத்தாத்ம
பக்தர்களுக்கு செல்வங்களை அருள்பவனே. நிவ்ருத்தாத்மனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எதையும் எதிர்பாக்காமல் செயல்களை செய்யும் பக்தர்களுக்கு, மோட்ச சாதனமான பூஜை, நைவேத்தியம் ஆகிய கர்ம ஆசரணைகளை செய்வித்து, அவர்களுக்கு செல்வம், ஞானம், ஆகியவற்றை அருள்பவனே. நிவ்ருத்தாத்மனே.
611. ஸ்ரீ ஸங்க்ஷேப்த்ரே நம:
தந்தெ3 தாயி உத3ரதி3ந்த3 ஜீவர்க3ள ஹொரகெ3
தந்து3 இடு3வ ‘ஸங்க்ஷேப்தா’ நமோ எம்பெ3 ஸர்வகர்தா
க்ஷிப்ர ஜீவர்க3ளிகெ3 ஸாத4ன அபரோக்ஷவித்து
ஷைவள பரதெ3 ப3ந்த3 ஹொரஹாகி முக்தி ஈவி
தந்தை, தாயின் வயிற்றிலிருந்து ஜீவர்களை வெளியே எடுத்து வைக்கும் ஸங்க்ஷேப்த்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்தையும் செய்பவனே. உன் பக்தர்களான ஜீவர்களுக்கு அபரோக்ஷ ஸாதனங்களை செய்வித்து, அவர்களுக்கு முக்தியை அருள்பவனே.
***
No comments:
Post a Comment