Friday, July 14, 2023

#211 - 621-622-623 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 621. ஸ்ரீ ஸ்ரீநித4யே நம:

அனுஷ்டா2 ஸம்ப்ரதா3ஸ்ரயஸ்ரீநிதி4நமோ எம்பெ3

தி3 தி3னதி3 நின்ன ப்ரீதிகர அனுஷ்டா2னவ

நீனு மாடி3ஸுவி ஸஜ்ஜனரிந்த3 ஞான ஸ்ரீநிதி4யே

ஞான 4 ஶ்வர்ய 2ணி லக்ஷ்மிகா3ஶ்ரயனே 

அனுஷ்டானங்கள், ஸம்பிரதாயங்களின் கதியேஸ்ரீநிதியேஉனக்கு என் நமஸ்காரங்கள். தினமும் உனக்கு மிகவும் பிடித்தமான அனுஷ்டானங்களை நீ ஸஜ்ஜனர்களிடமிருந்து செய்விக்கிறாய். ஞான ஸ்ரீநிதியே. ஞான, தன, ஐஸ்வர்ய ஆகிய அனைத்திற்கும் மற்றும் ஸ்ரீலட்சுமிதேவிக்கும் ஆஸ்ரயனே. 

622. ஸ்ரீ ஸ்ரீவிபா4வனாய நம:

பி3ரம்மதே3வனு ஸ்துதிஸெ ப்ரேரிஸுவஸ்ரீவிபா4வன

அஹர்நிஶி நமோ எம்பெ3 ஸ்ரீதே3வி 4க்தியுக் த்4யேய

மஹாலக்ஷ்மிகெ3 ஸமரில்ல 4க்தரலி விபூ4தி

3ஹு பாத்ரத3லி ப்ரேம உத்ஸாஹதி3 ஸேவிபளு 

பிரம்மதேவன் வணங்கி, துதிப்பதான ‘ஸ்ரீவிபாவனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீதேவி பக்தியுடன் உன்னையே வணங்குகிறாள். அப்படி உன்னில் பக்தி செய்யும் மகாலட்சுமிக்கு சமம் என்று யாரும் இல்லை. பற்பல ரூபங்களைக் கொண்டு அவள் உன்னை மிகவும் உற்சாகத்துடன் வணங்குகிறாள். 

623. ஸ்ரீ ஸ்ரீத4ராய நம:

வீர்ய 4ரிஸுவ நீனுஸ்ரீத4நமோ நினகெ3

ஸ்ரீய:பதி நின்னலி ஸ்ரீதத்வ ஒதப்ரோதத3லி

தா4ர்யவாகி3ஹுது ஸமஸ்த வஸ்து சராசரத3

வீர்ய ஸ்ரீதா4ரகனு நீ நின்ன அதீ4 தத்தச்சக்தி

 

வீர்யத்தை தரித்திருக்கும் நீயே ஸ்ரீதரனே, உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் பதியே. உன்னிடம் குறுக்கும் நெடுக்குமாக ஸ்ரீதத்வம் நிரம்பியிருக்கிறது. அனைத்து சராசர வஸ்துக்களின் வீர்யத்தை தரித்தவன் நீயே. அனைத்து சக்திகளும் உன்னுடைய அதீனமாகவே இருக்கின்றன.

***

No comments:

Post a Comment