Saturday, July 8, 2023

#205 - 603-604-605 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

603. ஸ்ரீ குவலேஶாய நம:

பூ4ம்யாதி3 ஜக3த்தல்லி வாஸ மாள்பிகுவலேஶாய

நமோ நீ ஜீவரொளு நியாமகனாகி3ருவி

கா3மாவிஶயிச பூ4தானி தா4ரயாம்யஹ மோஜஸ

ஸ்வாமி நீ ஸர்வத்ரவாஸஶாவாஸ்யமித3ம்ஸர்வம் 

பூமி முதலான உலகில் நீ வசிக்கிறாய். குவலேஷாய நம:. நீ ஜீவர்களில் நியாமகனாக இருக்கிறாய். ஸ்வாமியே நீ அனைத்து இடங்களிலும் வசிப்பவன். 

604. ஸ்ரீ கோ3ஹிதாய நம:

ஸோமாதி33 4ரிஸுவிகோ3ஹிதநமோ எம்பெ3

ஆம்னாய ரக்ஷக வேத3வாக்யஹிதகர வ்யாஸ

பூ4மி ஸ்வர்க்33 ஸர்வலோக ஹிதகர வாஸுதே3

ரமாபதி யாத3 நீ கோ3வுக3 ஹிதகர 

அமிர்தம் முதலானவற்றை தரித்திருப்பவனே. கோஹிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதங்களை காப்பவனே. வேதங்களால் போற்றப்படுபவனே. வேதவ்யாஸனே. பூமி, ஸ்வர்க்கம் முதலான அனைத்து உலகங்களையும் காப்பவனே, வாஸுதேவனே. ரமாபதியே. நீ பசுக்களை காப்பவனே. 

605. ஸ்ரீ கோ3பதயே நம:

ஸ்தோத்ர உபபோ43 மாள்பகோ3பதிநமோ நினகெ3

நேத்ர பூ4 ஜலஸ்வர்க்க3 வாக் வஜ்ர தி3ங்ரு ஶுபதி

4க்தக்ருத் ஸ்தோத்ரக3ளு வேத3வாக்ய ஸ்தோத்ரக3ளனு

ஹிததி3 ஸ்வீகரிஸி அனுக்3ரஹ மாள்பி கோ3பால 

ஸ்தோத்திரங்களை ஏற்றுக் கொள்பவனே. கோபதயே உனக்கு என் நமஸ்காரங்கள். கண், பூமி, ஜல, ஸ்வர்க்க, வாக் ஆகிய இடங்களில் விபூதி ரூபங்களில் இருப்பவனே. ருத்ரதேவரின் பக்தர்கள் செய்த ஸ்தோத்திரங்கள், வேத வாக்கிய ஸ்தோத்திரங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அருள்வாயாக கோபாலனே. 

***


No comments:

Post a Comment